பலவகையான தளங்கள் ஆன்லைன் மூலம் படங்களை வெட்டவும் சேர்ப்பதற்கும் பார்த்திருக்கிறோம் நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை வைத்து Image puzzle உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://lab.johnpencola.com/create_puzzle/
இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும் ( நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவு 400×300 pixels இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்). அடுத்து fun name என்பதில் ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு அடுத்து இருக்கும் Set how difficult it should be என்பதில் நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துவிட்டு Make it என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த படத்துடன் Image puzzle உருவாக்கபப்ட்டிருக்கும்.வலது பக்கம் இருக்கும் கட்டதை நகர்த்தி படத்தை சரியாக பகுதியில் கொண்டு சேர்க்க வேண்டும். புதுமை விரும்பிகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக