சனி, 28 ஜனவரி, 2012

புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்


 
புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.jpegmini.com/main/shrink_photo
போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தின் அளவை குறைப்பதைவிட இது பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அலட்சியத்தில் இத்தளத்தை சோதித்து பார்த்து வியந்துவிட்டோம்  உடனடியாக நாம் எடுத்து 4MB Size கொண்ட புகைப்படத்தை வெறும் 617 KB ஆக மாற்றியது தரத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இனி எப்படி இத்தளத்தை பயன்படுத்துவது என்று பார்ப்போம். இத்தளத்திற்கு சென்று Upload your photo என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டியது மட்டும் தான் நம் வேலை, அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றிய புகைப்படத்தின் வலது பக்கம் இருக்கும் JPEG Mini என்பதை சொடுக்கி விட்டு  புகைப்படத்திற்கு அடியில் இருக்கும் Download Photo என்பதை சொடுக்கி புகைப்படத்தை தறவிரக்கலாம்.Picasa மற்றும் Flickr இருக்கும் புகைப்படங்களை கூட நாம் எளிதாக தரம், அளவு குறையாமல் எடையை மட்டும் குறைத்து தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக