Posted on January 28, 2012 by muthukumar
உங்கள் கம்ப்யூட்டர்முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா?
தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் http://www.theworldsmiling.com/ இணைய தளம் அதை தான் செய்ய சொல்கிறது.
உள்ளே
நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளி க் செய்து
புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம். இந்த கட்டளையை
ஏற்று உங்கள் கம்ப்யூட் டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்துவிட்டு அழகாக
புன்னகை த் தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்கா வில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும்.
இந்த
தளத்தின் நோக்கமும் இது தான்.அதாவது உலகை மகிழ்ச்சி யாக வைத்திருப்பது.
உயர்வான ஆனால் இயலாத லட்சியம் என்பதால் மகிழ்ச்சி யின் அடையாளமான புன்ன
கையை சேகரித்து வைக் கும் பணியை மட்டும் இந்த தளம் செய்து வருகிறது.
எல்லோரும்
புன்னகைத்தபடி காட்சி தரும் இருப்பிடமாக விளங்கும் இந்த தளத்தின் முகப்பு
பக் கத்தில் புன்னகை பூக்களாக சிரிக்கின் றன.இது வரை மொத்தம் 2 ஆயிரம்
பேருக்கு மேல் இந்த தளத்தில் தங்கள் புன்னகை முகங்க ளை சமர்பித்
துள்ளனர்.வெப்கேம் வைத்திருப்பவர்கள் தங்கள் புன்னகையையும் இங்கே சமர்
பிக்கலாம்.
காதலனை
பார்த்து முகம் மலரும் காதலியின் மென்மையான புன்னகையி ல் துவங்கி பி எஸ்
வீரப்பாவின் அட்ட காசமான சிரிப்பு வரை உங்கள் விருப்பம் போல எப்படி
வேண்டுனாலும் சிரிக்க லாம். முகத்தில் ஆனந்ததை வெளீப்படு த்த வேண்டும்.அது
தானே இந்த தளத்தின் நோக்கம்!.
தினம்
தினம் இந்த தளத்திற்கு விஜயம் செய்து உலகம் முழுவதும் பதிவாகும் சிரித்த
முகங்களை பார்த்து மகிழலாம்.மலர்ந்த முகம் தானாக ஊக்கத்தை தரக்கூடியது
தானே.
ஆக புன்னகை பரவட்டும்.
நிற்ல
சிரித்த முகத்துடன் இருப்ப தன் மகத்துவம் உங்களுக்கு தெரிந்
திருக்கலாம்.இல்லை என்றால் விக்கிஹவ் தளத்தில் பாருங்கள், சிரிப்பது எப்படி
என விளக்கும் கட்டுரை இருக்கிறது.
சிரிப்பதன்
பயனனை அனுபவி யுங்கள் என்று சொல்லும் இந்த கட்டுரை உண்மையாக சிரிப்பது
எப்படி,சங்கடமில்லாமல் சிரிப்ப து எப்படி? கண்களால் சிரிப்பது எப்படி
என்றெல்லாம் வழி காட் டுகிறது.
சிரிக்க பயிற்சி எடுத்து கொள்ளவும் வழிகாட்டுகிறது.ஆம் சிரித்து பழகவும் பயிற்சி தேவை.ஒரு சில உம்மா ண மூஞ்சிகளுக்கு இன் னும் அதிகமாகவே தேவை.
சிரிப்பதன்
பலன் பற்றி மற்றொரு அருமை யான கட்டுரை ஸ்பிரிங் இணையதளத்தில்
இருக்கிறது.புன்னகை என்பது மகிழ்ச்சி யின் அடையாளம் மட்டும் அல்ல என்னும்
இந்த கட்டுரை சிரிப்பதால் ஏற் படும் பத்து பலன்களை பட்டியலிட்டு
விளக்குகிறது. அதில் ஒன்று சிரிப்பது மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை
வர வைக்கிறது என்பதாக உள்ளது.
பாலுணர்வின்
புன்னகை உள்ளுனர்வின் புன்னகை என்றெல்லாம் சுட்பமாக உளவி யல் நோக்கில்
தகவல் தருகிறது இந்த கட்டுரை. சிரித்தால் பாதி உலகம் உங்களை பார்த்து
சிரிக்கும் என்ற ஊக்க த்தோடு கட்டுரை முடிகிறது.
இன்னும்
புன்னகை கலையை கற்க விரும் பினால் திங் சிம்பில் நவ் இணையதளம் சிரிக்கும்
கலை கட்ட்டுரை மூலம் புன்ன கை கலையை நுட்பமாக கற்றுத் துரு
கிறது.முழுவதுமாக சிரிப்பது எப்படி, அறி முகம் இல்லாதவர் போல சிரிப்பது
எப்படி, வேலைக்கு நடுவே சிரிப்பது எப்படி என் றெல்லாம் பயிற்சி தருகிறது
இந்த தளம்.
வாழ்க்கை புன்னகைமயமாக இருப்பதற் கான குறிப்புகளையும் வழங்குகிறது.
புன்னகைக்க,புன்னகையை பார்த்து ரசி க்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக