ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கூகிள் பிளஸ் ஃபாலோயர் (Google Plus Follower ) வரலாற்றை கண்டுபிடிக்கலாம்.


 
சோசியல் வலைதளங்களில் கூகிளால் அறிமுகப்படுத்துப்பட்டு வளர்ந்து வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் ஃபாலோயர்களின் வரலாற்றை முழுமையாக எடுத்த்து சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகிள் பிளஸ்-ல் பல நேரங்களில் முகம் தெரியாத நபர்கள் பல பேர் நம்மை பின் தொடர்ந்து வருகின்றனர் ஒவ்வொரு முறையும் நாம் அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ஆனால் இனி எளிதாக கூகிள் பிளஸ் ஃபாலோயரின் வரலாற்றை ளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.circlecount.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Enter a name என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் எந்த ஃபாலோயரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அவரின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் இவர் பெயர் என்ன , எந்த இடத்தில் வசிக்கிறார் , இதுவரை கூகிள் பிளஸ்-ல் எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் என்பது பற்றிய அத்தனை தகவல்களையும் நமக்கு காட்டும்.கூகிள் பிளஸ்-ல் குறிப்பிட்ட நபரின் வரலாற்றை தெரிந்து கொளவதற்கு இந்தததளம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக