சனி, 14 ஜனவரி, 2012

எம்.எஸ்.ஆப்பிஸ் டாக்குமெண்ட்களில் இருந்து படங்களை(IMAGE) தனியாக பிரித்தெடுக்க



Posted On Jan 14,2012,By Muthukumar

தற்போது பல்வேறு கோப்புகள் யாவும் ஆப்பிஸ் பார்மெட்டுகளிலேயே உருவாக்கப்படுகிறன. அதிலும் பல கோப்புகள் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறன. ஆப்பிஸ் கோப்புகள் (வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட்) பலவும் படங்களுடன் இணைக்கப்பட்டு தற்போது உருவாக்கப்படுகிறன. இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட்,எக்சல்,பவர் பாயின்ட் பார்மெட்களில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன்  மட்டுமே இருக்கும். அவற்றை  தனியே பிரித்தெடுக்க Image Extraction Wizard என்னும் மென்பொருள் உதவுகிறது. இதன் மூலம் படங்களை மட்டும் தனியே பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக நாம் ஒரு வேர்ட் டாக்குமெண்டை எடுத்துக்கொள்வோம் அதில் அதிகமான விளக்கப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டுமெனில் தனித்தனி படங்களாக தேர்வு செய்து மட்டுமே சேமிக்க முடியும். அதற்கு பதிலாக ஒட்டுமொத்தாக அனைத்து படங்களையும் ஒரே சமயத்தில் பிரித்தெடுக்க முடியும். அதற்கு உதவும் மென்பொருள் தான் இந்த Image Extraction Wizard.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.  பின் குறிப்பிட்ட ஆப்பிஸ் கோப்பினை தேர்வு செய்யவும். அடுத்து எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்து கொள்ளவும். அடுத்து Next என்னும் பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவு தான் இதே போல் அனைத்து விதமான ஆப்பிஸ் கோப்புகளில் உள்ள படங்களையும் தனியே பிரித்தெடுத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பல்வேறு விதமான ஆப்பிஸ் பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருள் 40+ மேற்பட்ட ஆப்பிஸ் பைல் பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக