சனி, 14 ஜனவரி, 2012

பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.

Posted On Jan 14,2012,By Muthukumar

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம்.
நல்ல நண்பர்களுக்கு இது போதாது என்று நினைக்கிறீர்களா?நண்பர்களுக்கு பாராட்டோடு புள்ளிகளையும் பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?ஆம் எனில் ஹைப் புள்ளிகளை பரிசாக அனுப்பி வைத்து மகிழலாம்.
ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற விழாக்களுக்கு பரிசு கூப்பன்களை அனுப்பி வைப்பது போல இந்த தளம் வாயிலாக ஹைப் புள்ளிகளை அனுப்பி வைக்கலாம்.
நண்பர்களின் எந்த செயலையும் பாராட்ட இந்த புள்ளிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.ஹைப்புள்ளிகளை அனுப்புவதால் அந்த பாராட்டு வாசகம் இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.உலகமே அதனை பார்க்கும் வாய்ப்பு உள்ளது.அதோடு அந்த வாசகம் பேஸ்புக் பக்கத்திலும் இடம்பெறும்.மேலும் நேராக அந்த நண்பருக்கே இமெயில் மூலம் போய்சேர்ந்து விடும்.
நண்பர் டயட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்று வைத்து கொள்வோம் அதை பாராட்டி பத்து புள்ளிகளை பரிசளிக்கலாம்.தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் நூறு புள்ளிகளை பரிசாக தரலாம்.திருமணமா அதற்கும் நூறு புள்ளைகளை பரிசளிக்கலாம்.
நண்பர்களை இந்த புள்ளிகளை சேர்த்து வைத்து கொண்டு தாங்களு பதிலுக்கு பரிசளித்து ஊக்கம் அளிக்கலாம்.இல்லை என்றால் ஆயிரம் புள்ளிகள் சேர்ந்த பிறகு அதனை டால்ருக்கு மாற்றிக்கொள்ளலாம்.ஆம் புள்ளிகளுக்கு பண மதிப்பு உண்டு.காரணம் புள்ளிகள் இலவசம் அல்ல;அவற்றை சென்ட்(காசு)கொடுத்து வாங்க வேண்டும்.ஒரு டாலருக்கு நுறு புள்ளிகள்.
கட்டணச்சேவை என்றவுடனேயே சுரத்து குறைந்து போகலாம்;ஆனால் யோசித்து பாருங்கள் வெறும் புள்ளிகளை பரிசளிப்பதில் என்ன சுவார்ஸ்யம் இருந்து விடமுடியும்.யார் வேண்டுமானாலும் ஆயிரம் லட்சம் என புள்ளைகளை வாரிவிடலாம் அல்லவா?ஆனால் டாலர் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் புள்ளிகளுக்கு ஒரு மதிப்பு வருமே.தவிர ஒரு நாளுக்கு அதிகபட்சமாக நூறு புள்ளிகள் தான் பரிசாக தர முடியும்.
அது தான் இந்த தள‌த்தின் சுவாரஸ்யம்.
அமெரிக்காவை மையமாக கொண்ட தள‌ம் என்றாலும் சர்வதேச அளவில் செய்லப‌டுகிற்து.நம்மவர்களுக்கு அமெரிகாவில் நண்பர்களும் உறவினர்களும் இருப்பதால் தாராளமாக இந்த தளம் மூலமாக புள்ளிகளை பரிசளிக்கலாம்.
புதுமையான் மற்றும் சுவாரஸ்யமான சமூக பரிசளிப்பு என்று இந்த தளம் தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
உண்மையிலேயே சுவாரஸ்யமானது தான்.பேஸ்புக் கால சுவாரஸ்யம்.பேஸ்புக் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றக்கூடியது.
தளத்தின் முகப்பு பக்கத்தில் பரிசளிக்கப்பட்ட வாசகங்கள் வரிசையாக இடம் பெறுவதோடு இது வரை அதிகம் பரிசளித்தவ‌ர்கள்,புதிதாக பரிசளித்தவர்கள் என்று தனித்தனியே பட்டியலும் அளிக்கப்படுகிறது.
பரிசளித்து மகிழ இணையதள முகவரி;http://www.hypepoints.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக