Posted On Jan 23,2012,By Muthukumar
PDF கோப்புகள் திறப்பதற்கு சில நேரங்களில் நாம் கடவுச்சொல் கொடுத்து
வைத்திருப்போம் ஆனால் பல நேரங்களில் கடவுச்சொல்மறந்து போகும் அப்படி
கடவுச்சொல் மறந்து போகும் நேரத்தில் குறிப்பிட்ட PDF கோப்பின் கடவுச்சொல்லை
நீக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.பெரும்பாலும் இபுத்தகங்கள் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் , படங்கள் போன்றவற்றை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்திருப்போம், ஆனால் சில நேரங்களில் நாம் வைத்த கடவுச்சொல் மறந்து இந்த கோப்புகளை திறக்க முடியாமல் இருப்போம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இணையதள முகவரி : http://www.becyhome.de/download_eng.htm#becypdfmetaedit
இத்தளத்திற்கு சென்று Download என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி நம் கணினியில் எளிதாக நிறுவிக்கொள்ளலாம். மென்பொருளை நிறுவிய பின் இயக்கியதும் முதலாவதாக கடவுச்சொல் உள்ள PDF கோப்புகளை தேர்ந்தெடுக்க சொல்லும் அதை நாம் தேர்ந்தெடுத்த பின் Save As என்பதை சொடுக்கி வேறு பெயரில் PDF கோப்பாக சேமிக்கலாம், இனி PDF கோப்புகளின் கடவுச்சொல் மறந்துவிட்டாலும் இந்த மென்பொருள் உதவியுடன் PDF கோப்புகளை எளிதாக திறந்து படிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக