Posted On Jan 20,2012,By Muthukumar
உங்கள் கம்ப்யூட்டரை நீங்களோ அல்லது மற்றவரிடமோ கொடுத்து பார்மெட் செய்து புதிதாக விண்டோ எக்ஸ்பி இன்ஸ்டால் செய்ய நீங்கள் நினைக்கும்பொழுது முதல் வேலையாக உங்கள் Personal Documents அனைத்தையும் Backup ( காப்பி ) செய்து ஒரு பென் டிரைவிலோ அல்லது ஹார் டிஸ்கிலோ நீங்கள் ஏற்ற நினைக்கிறீர்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லையா ?
Start > All Programs > Accessories > System Tools > Backup என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து
வரும் இந்த தட்டில் My Documents and Settings என்ற இடம் செலெக்ட் ஆகி
இருக்கும். இதில் உங்கள் My Documents ல் உள்ள அனைத்தும் மற்றும் இண்டெர்
நெட் Favorites, Desktop ல் உள்ள பைல்கள் மற்றும் Cookies போன்றவை காப்பி
ஆகும். இவை அனைத்தும் உங்கள் யூசரில் உள்ள டாக்குமெண்டுகள் மட்டும். ஆனால்
அனைத்து யூசரின் டாக்குமெண்டும் காப்பி ஆக வேண்டுமென்றால் அடுத்த ஆப்சனை
செலெக்ட் செய்துகொள்ளுங்கள். அல்லது கம்ப்யூட்டரில் உள்ளை அனைத்து
ஒட்டுமொத்தமாக காப்பி ஆகவேண்டுமென்றால் மூன்றாவதாக உள்ள All information on
this computer என்ற ஆப்சனை செல்ட்க் செய்துகொள்ளுங்கள். அல்லது ஒரு
குறிப்பிட்ட போல்டரை மட்டும் காப்பி செய்யவேண்டும் என்றால் இறுதியாக உள்ள
ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான போல்டரை செல்ட்க்
செய்துகொள்ளுங்கள்.
அடுத்து Next ஐ அழுத்துங்கள்...
இப்பொழுது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்துள்ள பென் டிரைவ் அல்லது ஹார்டிஸ்க் எதுவோ அதன் ஆப்சன் செல்ட்க் ஆகும். அடுத்து Next ஐ அழுத்துங்கள்.
உடனே உங்கள் Personal Documents அனைத்தும் நீங்கள் இனைத்துள்ள பென் டிரைவில் காப்பி ஆகும்.
காப்பி ஆகி முடிந்ததும் Finish என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்.
இனி உங்கள் கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் இன்ஸ்டால் முடிந்த பிறகு மேலே சொன்ன முறைப்படி மறுபடியும் Backup ஆப்சனுக்கு சென்று Restores Fils and Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரின் My Document ஐ தேர்ந்தெடுத்து உங்கள் File களை மறுபடியும் Restore செய்து பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக