வெள்ளி, 13 ஜனவரி, 2012

பிளாக்கர் கமென்ட்டில் Reply வசதி கிடைக்காதவர்களுக்கு தீர்வு

Posted On Jan 13,2012,By Muthukumar

வாசகர்கள் நெடுநாளாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வசதியான Reply Comment வசதியை பிளாக்கர் தளம் அறிமுகபடுத்தியது. இதனை பற்றி விரிவாக நேற்றைய பதிவில் பார்த்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த Reply  வசதி பெரும்பாலான வலைபூக்களில் தெரியவில்லை. நேற்றைய பதிவில் உள்ள வழிமுறையை செய்தும் உங்கள் பிளாக்கரில் இந்த வசதி தெரிய வில்லையா ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது தான். உங்கள் டெம்ப்ளேட்டில் சில கொடிங்க்ஸ் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியை கொண்டு வரலாம் அது எப்படி என கீழே பார்ப்போம்.


முதலில் இந்த லிங்கில் பிளாக்கரில் வந்தாச்சு Comment Reply வசதி ஆக்டிவேட் செய்யசென்று கொடுக்க பட்ட வழிமுறையின் படி உங்கள் வலைப்பூவில் செட்டிங்க்ஸ் மாற்றுங்கள்.
செட்டிங்க்ஸ் மாற்றியும் உங்கள் வலைப்பூவில் Reply வசதி வரவில்லை எனில் கீழே உள்ள வழிமுறையை தொடருங்கள்.
  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். Design - Edit Html சென்று உங்கள் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Expand Widget Template தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும். (Ctrl+F கொடுத்து தேடினால் சுலபமாக கண்டறியலாம்)
<b:include data='post' name='post'/>
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:include data='post' name='comments'/>
</b:if>
மேலே சிவப்பு நிறத்தில் காட்டி இருக்கும் கோடிங்கை மட்டும் அழித்து கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும். கவனம் முதல் வரியை ஒன்றும் செய்ய கூடாது சிவப்பு நிறத்தில் உள்ள கோடிங்கை மட்டும் நீக்கவும்.
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b:if cond='data:post.showThreadedComments'>
<b:include data='post' name='threaded_comments'/>
<b:else/>
<b:include data='post' name='comments'/>
</b:if>
</b:if>
  • மேலே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்த பிறகு SAVE TEMPLATE கொடுத்து மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள். 
இப்பொழுது உங்கள் வலைப்பூவை திறந்து கருத்து பகுதியை ஓபன் செய்து பாருங்கள் இந்த வசதி சேர்ந்திருப்பதை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக