வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஐபோட்டின் உதவியுடன் ஆங்கில அறிவை பெருக்குவது எப்படி?


posted on jan 13,2012,by muthukumar

ஊரில ஏலவே 90 நாளில் இங்கிலீசு பேசுவது எப்படீன்னு ஒரு புக்கு சக்கை போடு போட்டு விற்பனையாகிட்டு இருக்கு. அதை வாங்கிப் படிச்சே ஆங்கில அறிவு வளரலை. இதுல நீ ஐபோட்டை வைத்து ஆங்கில அறிவினை வளர்க்கப் போறியா? ராஸ்கல் அப்படீன்னு எல்லோரும் திட்டுறீங்க இல்லே! ஐபோட் உள்ளவங்களுக்கு மாத்திரம் தான் இந்தப் பதிவா? அப்போ நமக்கெல்லாம் இல்லையா என்று சிலர் எஸ் ஆக ரெடி ஆகிட்டீங்க இல்லே. கவலையை விடுங்க. கம்பியூட்டர் உள்ள எல்லோருக்கும் இந்தப் பதிவு ரொம்ப யூஸ் புல்லா இருக்குமுங்க. ஆனால் IPOD, IPAD, I PHONE உள்ளவங்களுக்கும் இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க. வாருங்க. பதிவிற்குள் நுழைவோம்.
நம்மாளுங்க புதுசா கடைக்கு என்ன பொருள் வந்தாலும் பிலிம் காட்டுற நோக்கில வாங்கி தங்களோட சட்டைப் பையினுள் போட்டு அழகு பார்ப்பாங்க பாருங்க! இது தான் தமிழன் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுங்க. ஐபோன், ஐபாட், ஐபோட் ஆகியவற்றில் உள்ள சிறப்புக்களை அறியாமலே நம்மாளுங்க கலர் காட்டும் நோக்கில கையில வைச்சு நோண்டிக்கிட்டிருப்பாங்க; பார்ப்பதற்கு ரொம்பவே கொடுமையாக இருக்கும். ஐபோட்டில, iTunes இல உள்ள PODCAST என்ற ஸ்பெசல் அயிட்டம் பத்தி உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமுங்க?  இலங்கை, இந்திய நாடுகளைப் பொறுத்த வரை நம்மட தாய் மொழியாக நாம தமிழிலே எந் நேரமும் பேசிக் கொண்டிருப்பதால் கஷ்டப்பட்டு காசு செலவு செஞ்சு படிச்ச இங்கிபீசு மொழிப் புலமையோ மந்த கதியில தான் இருக்குமுங்க. 
ஆங்கில சானல்களையும், ஆங்கில ரேடியோக்களையும் கேட்டு எமது உச்சரிப்புக்களை நேர்த்தியாகச் சொல்லப் பழகிக்க பல வழிகள் இருக்கும் போது நம்மாளுங்க, வெள்ளக்காரன் தஸ்க்கு புஸ்க்குன்னு இங்கிபீசு பேசுறான்; எனக்கு அவன் பேசுற ஒன்னுமே புரியலை என்று ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பதை அவொய்ட் பண்ணி வைச்சுக்குறாங்க.உண்மையில் ஆங்கில டீவி சான்ல்களினூடாக நீங்க உங்க ஆங்கில மொழித் திறமையை விருத்தி செய்ய வேண்டுமானால், Documentaries, மற்றும், விவாத நிகழ்ச்சிகளை கண்டிப்பாகப் பார்க்கனும். அப்படி நிகழ்சி பார்க்கும் போது சரியான முறையில் அவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கனும் என்றால், வாயசைவை உத்துப் பார்க்கனுமுங்க. உங்களுக்கு தெளிவான புரிதல் ஏற்படும் வரை, கண்டிப்பாக ஆங்கில டீவி சேனல்களைப் பார்க்கும் போது,பேசுறவங்களோட வாயசைவினை உத்துப் பார்த்தால் தான் உங்களுக்கும் ஒரு அன்ட்டஸ்ரான்டிங் கிடைக்குமுங்க.
இந்தப் பதிவு ஐபோட், ஐபாட், அப்புறமா ஐபோன் இல்லாதவங்களுக்கும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் என நினைத்து எழுதியிருக்கேன். இந்தப் பதிவின் நோக்கம் iTunes ஊடாக உங்களின், உங்க குழந்தைங்களின் ஆங்கில அறிவினைப் பெருக்குவது எப்படி என்று விளக்குவதாகும்.  நம்மாளுங்களில் அதிகம் பேர் பயங்கர சோம்பேறிங்களா இருபபானுங்க. தங்களிடம் உள்ள மியூசிக் ப்ளேயரில் ஒருவாட்டி அப்லோட் பண்ணி வைச்ச சாங்ஸ்ஸையே மறுபடியும், மறுபடியும் கேட்டு சலிப்பு ஏற்படும் வரை அப்லோட் பண்ணிக்க டைம் இல்லைன்னு ரொம்ப பிசியாக அலைஞ்சிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கும் இந்த வசதி ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க. எல்லோருடைய கம்பியூட்டரிலும் iTunes சாப்ட்வேர் இருக்குத் தானேங்க. இல்லேன்னா உடனடியாக இங்கே கிளிக் செஞ்சு டவுண்லோட் பண்ணிக் கொள்ளுங்க. அப்புறமா உங்களுக்கு வேண்டியது ஒரு ஆப்பிள் ஐடி. 
ஆப்பிள் ஐடியை நீங்க உங்க ஈமெயில் முகவரியின் உதவியோடு இலவசமாகவே ரிஜிஸ்டர் பண்ணிப் பெற்றுக் கொள்ளலாம். ஆப்பிள் ஐடியைப் பெறுவதற்கு இங்கே கிளிக் செஞ்சு கொள்ளுங்க. அடுத்ததாக நீங்க பண்ண வேண்டியது, உங்க ஐபோட்டை அல்லது ஐபோனை iTunes சாப்ட்வேருடன் கம்பியூட்டரூடாக கனெக்ட் பண்ணிக்கனும்.ஐபோட் உள்ளவங்களும் சரி, இல்லே ஐபோட், ஐபோன் இல்லாதவங்களும் சரி முதல் வேலையாக உங்க கம்பியூட்டரில் உள்ள iTunes சாப்ட்வேரின் இடது கைப் பக்கத்தில் உள்ள iTuens Store என்ற ஆப்சனைக் கிளிக் செஞ்சு கொள்ளுங்க. அப்புறமா, ஒரு மெனு கிரியேட் ஆகுமுங்க. அங்கே நீங்க Podcast என்ற ஆப்சனை அழுத்தனமுங்க. இங்கே பார்த்தீங்கன்னா, லாங்குகேஜ் அப்படீன்னு ஒரு ஆப்சன் இருக்குமுங்க. அதில நீங்க கிளிக் செஞ்சா, உங்களுக்கு விருப்பமான மொழியினைக் கற்பதற்குரிய ஆடியோக்களை நீங்க நேரடியாக கேட்டு மகிழலாம். இல்லேன்னா, டவுன்லோட்டும் செஞ்சுக்கலாம்.
இப்போ சொல்லும் விஷயத்தை ரொம்ப கவனமாக நோட் பண்ணிக்குங்க. உங்களுக்கு பிடிச்ச நிகழ்ச்சிகளை நீங்க உங்களுக்கு விரும்பிய மொழியில் நேரடியாகவே கேட்டு மகிழலாம். கம்பியூட்டரில உங்கள் ஐபோட்டில உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சேவ் செஞ்சுக்கனும் என்றால், மொதல்ல உங்களுக்கு பிடிச்ச விடயத்தினை Podcast என்ற மெனுவின் கீழே செலக்ட் பண்ணிக் கொள்ளுங்க. அப்புறமா அந்த நிகழ்ச்சியின் கீழே உள்ள Subscribe  மெனுவில் சப்கிரைப்ஸ் பண்ணிக் கொள்ளுங்க. இங்கே தான் உங்க சோம்பலைப் போக்கிற விடயமே இருக்குங்க. ஐடியூன்ஸில ஒவ்வோர் நாளும் அல்லது ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி ஒவ்வோர் Podcast நிகழ்ச்சிகளை அப்லோட் பண்ணிப் புதுசு புதுசா போட்டுக்குவாங்க. ஸோ...நீங்க உங்களுக்குப் பிடிச்ச நிகழ்ச்சியை சப்ஸ்கிரைப் பண்ணி வைச்சீங்க என்றால், உங்க ஐபோட்டை கம்பியூட்டரோடு கனெக்ட் செய்யும் போது தானாகவே புதிய நிகழ்ச்சியையும் உங்க ஆப்பிள் ஐடியூன்ஸ் அப்லோட் பண்ணிக் கொள்ளுமுங்க. உங்களுக்கு ஏற்படும் நேர விரயமும் தடுக்கப்படும் அல்லவா?
நமக்கு வீட்டில இருக்கும் போது ரேடியோ கேட்க டைம் கிடைக்காது. ஆனால் வெளியே போகும் போது மியூஸிக் ப்ளேயரை காதில மாட்டிக் கொண்டு போவோமுங்க. இப்படியான வேளையில் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு அல்லது சமையல் அல்லது செய்தி அல்லது காமெடி அல்லது ஹாலிவூட் நிகழ்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள், கார்ட்டூன் காமெடிகள் எனப் பல வகையான ஏராளமான நிகழ்ச்சிகள் இந்த ஐடியூன் Podcast இல் இலவசமாக கிடைக்குதுங்க. அமெரிக்க, இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலிய ரேடியோக்களின் ஸ்பெசல் நிகழ்ச்சிகளும் இங்கே கிடைக்குதுங்க. உங்க விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி நீங்க சப்கிரைப்ஸ் பண்ணி உங்க ஐடியூனில் சேமித்து, நேரடியாக கேட்டும் மகிழலாம். அல்லது உங்க ஐபோட், ஐபாட், ஐபோனில் சேமித்து பயணம் செய்கையில் கேட்டு மகிழலாம். 
என்னங்கடா கொடுமை, ஆங்கிலத்தில நல்ல விடயங்கள் மட்டும் தான் கிடைக்குதா? அப்போ நம்ம கில்மா மேட்டருங்க எல்லாம் கிடைக்காதா என்று சில பேர் ஏங்குவீங்க. அவங்களுக்கு Adult என்ற பிரிவின் கீழ் காமெடி, கில்மா நடிகர்களின் பேட்டி, மற்றும் சுவையான விடயங்கள் கிடைக்குது. அதனையும் நீங்க கேட்டு மகிழலாம். சிலருக்கு ஆங்கில மொழி படிக்கனும் என்று ஆசை இருக்கும். சிலருக்கு பிரெஞ்சு மொழியை விருத்தி செய்யனும் என்று ஆசை இருக்கும். சிலருக்கு சீன மொழி, சிலருக்கு ஸ்பானிஷ் மொழியை விருத்தி செய்யனும் என்று ஆசை இருக்கும்.ஸோ...இந்த மாதிரி ஆசை உள்ளவங்களுக்கு நல்லதோர் தேர்வு தான் இந்த podcast. உங்க பிள்ளைங்களின் ஐபோட்டில் நீங்க ஆங்கில அறிவினைப் பெருக்கும் விடயங்களைப் பதிந்து கொடுத்தால் சின்ன வயசிலே அவர்களுக்கு ஆங்கில மொழியினைக் கற்க வேண்டும் எனும் ஆவல் ஏற்படும் அல்லவா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக