Posted On Jan 17,2012,By Muthukumar
இணையம்
உபயோகப்படுத்தப்படும் அனைவராலும் பயன்படுத்தப்படும் வசதி என்று சொன்னால்
அது மெயில் சேவையாக தான் இருக்கும். இதில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப
பல்வேறு நிறுவனங்களின் ஈமெயில் சேவைகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக இதில்
ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். இதில் உள்ள பல்வேறு வசதிகள்
வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் வாசகர்களை இதனை விரும்பி
பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் கோப்புகளை சேமிக்க உதவுவது கூகிள்
டாக்ஸ் வசதியாகும். ஜிமெயிலில் வரும் அட்டாச்மென்ட் பைல்களை எப்படி
நேரடியாக கூகுள் டாட்சில் சேமிப்பது என இன்று பார்ப்போம்.
இந்த வசதியை ஒரு க்ரோம் நீட்சி மூலம் கொண்டு வரலாம். முதலில்
கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள்
கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
சாதரணமாக ஜிமெயிலில் அட்டாச்மென்ட் ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல இருக்கும்.
இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த பிறகு அட்டாச்மென்ட் மெயிலை ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல வரும்.
புதிதாக Save To Docs என்ற
லிங்க் வந்திருப்பதை காணலாம். அதில் கிளிக் செய்து நேரடியாக அட்டாச்மென்ட்
பைல்களை கூகுள் டாக்சில் சேமித்து கொள்ளவும்.
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய - Gmail Attachments To Docs
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக