ஞாயிறு, 29 மார்ச், 2015

ஸ்கிரீன் டிப் தோற்றம்


வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.