திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க




இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன். விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டுக்கு எளிதா க இல்லை என்பதே
இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டுபோன்களை பாதுகாப்பாக வைத்திருக்க வில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள்அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு . தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்திலேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை  பாதுகாப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்
ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின்(PIN), பாஸ்வேர்டு என்றமூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.
இது மாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப் பட்டு விடும்.ஒவ்வொருமுறை போனை ஆன் செய் யும் போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால் நம் போன் தொலை ந்து போனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்த தாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும் போதுandroid.com/devicemanager என்ற முகவரி க்குச் சென்று, 5 நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள்அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக் கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான  ESET சொல்லும்கணக்கின்படி, அலுவலகங்களில் வை- ஃபைமூலம் இணையத்தைப் பயன்படுத்துவதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன் படுத்துவதற்குமுன், அது எந்தளவுக்கு பாதுகாப் பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம்கேட் டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
இதேபோல, பொதுஇடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாய ம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிகமுக்கியமானதாகத்தோன்றும் எத்தகவ லை யும் உங்கள்போனில் பதிவுசெய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவதுதவிர, போன்பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியு ம்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன்தேவை, பாதுகாப்பு போன்ற வற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய் வதுநல்லது. குறிப்பாக, கூகுள்ப்ளே இல்லாமல் வேறுஎங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பான தில்லை.
அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளி கேஷன்களை எப்போதும் லாக்செய்து வைக் கலாம். இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளி கேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொரு முறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவது போல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங்சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல் வேறு வசதிகள் கிடைக்கும். ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதி யைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளி கேஷன்மூலம் நமதுதனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில்பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொ டுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரி யை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப்பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின்சாஃப்ட்வேரை புதியவெர்சனுக்கு அப்டேட்செய்துவைத்திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளி கேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும் போதெல்லாம் அதைச்செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வே ண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம்கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள்போன் தொலைந்து போய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜி மெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்று வது.
அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வது தான். ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்ற லாமே!

ஞாயிறு, 31 மே, 2015

மைக்ரோசாப்ட் தரும் மடிக்கக் கூடிய கீ போர்ட்



தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம்.
இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும். ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதிந்து, விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பினை சோதித்து வருகின்றனர். இவர்கள், ஏறத்தாழ 9 லட்சம் பதிவுகளை பின்னூட்டமாக அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கார்டனா டூல், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படும். இந்த அறிவிப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் வெளியிட்டார்.
மொபைல் போனுக்கான விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதுதான் இந்த முறையில் முதலாவதாக வெளியிடப்பட்ட தொகுப்பு என்றும், இது இன்னும் உருவாக்க வளர்ச்சியில் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

சனி, 9 மே, 2015

கணிணியில் பணிபுரிபவரா நீங்க?



நாம் எப்போதெல்லாம்
கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னு ம், கழிவறையைப் பயன்படு த்தியபிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்தபிறகு எனத் தே ர்ந்தெடுத்த சில வேலைக ளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டு மென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பய ன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினை க்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச் சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக் கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நி னைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிக ள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக் டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசு வோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூ ட்டரில்தானே வேலை பார்க்கி றோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இரு ந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும்.
கிருமிகளின் பட்டியல்
லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளைப்பரிசோதனைக்கு உட்படுத் தினார்கள். அதில் ஒரு கம்ப்யூ ட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீ ரியா அளவை விட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திரு க்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவ றை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலி பார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப் பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்க ளே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத் தி வந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியா ன வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர் கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம்அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தம் உங்கள் கையில்
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறு த்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப் பும் அமைகிறது. பலர் கழிப்பறை யைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்த ம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட் டரின் முன்னால் அமர்ந் து கொண்டு கைக்குட்டை யால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவது ம் சகஜம்.
இதுபோன்ற பழக்கங்களா லும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளி யோ,இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர்பயன்படுத்திய கீபோர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போ தும். அவருடைய நோய்கள் நம க்கும் மிக எளிதாகத் தொற்றி  விடும்.
நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொ ண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வதுதான், நமக்குக் கைவந்த கலையா யிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வே லை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்ப தைப் பலரும் வழக்கமாக வைத்திரு க்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப் யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உண வுத் துணுக்கை ஆதாரமாகக் கொண் டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும்.
சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப் யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கி றோம்? கீ போர்டில் தூசுப் படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார் த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல் லையென்றால் இது அலுவ லக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள் வார்கள் என்றநினைப்பு, சுத்தத்தைத்துரத்திவிடுகிறது.
சிலஅலுவலகங்களில் இடம்மாறியோ, வேலைநேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படு த்த நேரிடும். இதுபோன்ற சூழ்நி லையில் சுத்தம் செய்வது எவ்வ ளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.
என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட கால இடைவெளி யில் கீ போர்டு, மவுஸ், செல் போன் ஆகியவற்றைச்சுத்தப் படுத்தவேண்டும். கீபோர்டை த் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூல ம் அதனுள்ளே சிக்கியிருக்கு ம் உணவுத் துணுக்குகளையோ, சிறியகுப்பையையோ அகற்றலா ம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத் தெடுக்கலாம்.
இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத் தம். எங்கெல்லாம் கிருமித்தொ ற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பி றகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண் ணீரிலோ அல்லது சுத்திகரிப் பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக் கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக்கு றைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்து 

வியாழன், 30 ஏப்ரல், 2015

ஏ.சி.டி. பைபர் நெட் தரும் அதிவேக இணைய இணைப்பு

ஏ.சி.டி. பைபர் நெட் தரும் அதிவேக இணைய இணைப்பு

நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம். பீம் டெலி நிறுவனம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது.
இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது.
மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது.
விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது.
ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது.
தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது.
இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

ஸ்கிரீன் டிப் தோற்றம்


வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

புதன், 11 பிப்ரவரி, 2015

ஸ்மார்ட் போன் கேமராவில் தெளிவான போட்டோ எடுக்க


Posted By Muthukumar,ON Feb 11,2015
கேமராவில், லென்ஸை முன் பின் இழுத்து, போகஸ் செய்து, போட்டோக்களை எடுத்த காலம் ஒன்று இருந்தது. பின்னர், டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் அறிமுகமாகி, போட்டோ வல்லுநர்களின் பிரச்னையைப் பெரிதும் தீர்த்தன. 

இப்போது நாம் அனைவருமே எப்போதும் கேமராவுடன் தான் செல்கிறோம். ஆம், யாருடைய மொபைல் போனில், கேமரா வசதி இல்லாமல் உள்ளது? இருப்பினும், ஸ்மார்ட் போனில் கிடைக்கும் கேமராக்கள் தான், தரம் உயர்ந்ததாக, நல்ல படங்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகளைத் தருவதாக அமைந்துள்ளன. அதனை எப்படிப் பயன்படுத்தி, சிறந்த தரம் வாய்ந்த படங்களை எடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.


1. போகஸ் (Focus):: 

படங்கள் தெளிவாகத் தெரிய, கேமராவில் உருவம் குவியச் செய்வதனை இது கூறுகிறது. படம் ஒன்று எடுக்கப்படும் முன், திரையைப் பார்த்து, அது சரியாக போகஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

நீங்கள் படம் எடுக்கும் நபர் அல்லது பொருள் சரியான போகஸ் நிலையில் இல்லை என்றால், உங்கள் ஸ்மார்ட் போனை, முன் பின்னாக அட்ஜஸ்ட் செய்திடவும். அல்லது நீங்கள் முன், பின்னாகச் செல்ல வேண்டியதிருக்கும்.


2. இன்னொரு வழியும் போகஸ் செய்திட ஸ்மார்ட் போனில் உண்டு. பொருளில் எந்த இடத்தைப் போகஸ் செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, கேமராவின் திரையில், அந்த இடத்தில் தொடவும். 

ஸ்மார்ட் போனின் கேமரா, நீங்கள் தொட்ட இடத்தை மையமாகக் கொண்டு, போகஸ் செய்திடும். இத்தனையும் சரி செய்த பின்னர், ஸ்மார்ட் போனில், கிளிக் செய்திட வேண்டிய இடத்தைத் தொடவும்.


3. ஸூம் தவிர்க்கவும்: 

பல ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராவில், ஸூம் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் ஸூம் செய்வது நல்ல படத்தைத் தராது. இங்கு தான், ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும் மற்ற கேமராக்களுக்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் உணரலாம். 

மற்ற கேமராவில் ஸூம் செய்திடுகையில், கேமராவின் லென்ஸ் முன் பின்னாக நகர்ந்து நிற்கும். ஆனால், ஸ்மார்ட் போனில் லென்ஸ் நகராது. தற்போது வந்திருக்கும் சில ஸ்மார்ட் போன்களில், திரையை இரு விரல்களால் கிள்ளி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 

ஆனால், இதனைச் செய்யக் கூடாது. ஏனென்றால், லென்ஸ் நகரப் போவது இல்லை. இந்த கிள்ளும் வசதி, படத்தின் அளவைக் குறைக்க, அதிகரிக்க மேற்கொள்ளலாம். ஸூம் செய்திட அல்ல. 

படம் எடுத்த பின்னர், நாம் படத்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். எனவே, ஸ்மார்ட் போனில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.


4. ப்ளாஷ் வேண்டாம்: 

முன்பு பயன்படுத்தப்பட்ட, பொருட்கள் அல்லது ஆட்களைப் பார்த்து குறி வைத்து எடுக்கப்பட்ட கேமராக்களில், ப்ளாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பது சரியே. சுற்றுப் புறச் சூழல் வெளிச்சத்தைப் படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் ப்ளாஷ் கொண்டு என்ன செய்கிறோம் என நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால், ப்ளாஷ் பயன்படுத்துவது சரி அல்ல. ஒரு பொருள் சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருந்தால், அதனைத் தெளிவாகக் காட்டுவதற்கு ப்ளாஷ் உபயோகிக்கப்படுகிறது. 

ஆனால், அது சரியான வழி அல்ல. குற்றம் நடந்த இடத்தில், அங்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும், துல்லியமாகப் படம் எடுக்க திட்டமிட்டால், ப்ளாஷ் பயன்படுத்தலாம். 

சாதாரணமாக என்றால், இயற்கை வெளிச்சத்தினைப் பயன்படுத்துவதே நல்லது. கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, எடுக்கப்படும் பொருளுக்கு ஒளி தருவதைக் காட்டிலும், சுற்றிலும் உள்ள இயற்கை வெளிச்சத்திற்கு ஆட்களைக் கொண்டு செல்லவும். 

அல்லது, ஆள், பொருள் இருக்கும் இடத்திற்கு விளக்கு ஒளியைத் தரவும். எனவே, மிக அவசியம் என்றால் ஒழிய, கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்த வேண்டாம்.


5. பின்புறக் கேமராவைப் பயன்படுத்துக: 

ஸ்மார்ட் போன் அனைத்திலும், இப்போது முன்புறமாகவும், பின்புறமாகவும் என இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. இதில் பின்புறமாகத் தரப்படும் கேமராவே, அதிகக் கூடுதல் திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. 

எனவே, போட்டோ எடுக்க இதனையே பயன்படுத்த வேண்டும். முன்புறமாக உள்ள கேமராவினைப் பயன்படுத்தக் கூடாது. தானாக எடுக்கப்படும் செல்பி போட்டோ ஷூட் செய்திட வேறு வழியில்லை. 

முன்புறமாக உள்ள கேமராவினையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நம் நண்பர் யாரையாவது நம்மைப் போட்டோ எடுக்கச் சொல்லலாம்.


6. கேமரா அப்ளிகேஷன்கள்: 

அண்மையில் வெளியான கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், கேமரா அப்ளிகேஷன் தரப்படுகிறது. தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை போனில் உள்ள அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படுகின்றன.