திங்கள், 3 டிசம்பர், 2012

ஸ்லிப்ஸ்ட்ரீமிங் டிஸ்க் தயாரிக்க

Posted On Dec 03,2012,By Muthukumar
விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டலேஷன் குறித்து படிக்கையில், கேட்கையில் இந்த ஸ்லிப்ஸ்ட்ரீமிங் சி.டி. (Slip Streaming) என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம். இது எதனைக் குறிக்கிறது? இந்த சிடியை எப்படி, எதற்காகத் தயாரிக்க வேண்டும்? பயன் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றனவா? இதோ, அது குறித்து இங்கு காணலாம்.
சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் சிலர் அது குறித்து சிலாகித்துப் பேசிவிட்டு, ஸ்லிப்ஸ்ட்ரீமிங் சி.டி. இருந்தால், வேலை கொஞ்சம் எளிதாக இருந்திருக்குமே என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். பொதுவாக, விண்டோஸ் சிஸ்டத்தினை, உங்கள் கம்ப்யூட்டரில் எளிதாக ரீ இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால், அதன் பின்னர், சர்வீஸ் பேக், ட்ரைவர் புரோகிராம்கள், அதற்கான பேட்ச் பைல்கள், அண்மைக் காலத்திய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் எனப் பலப் பல அப்டேட் விஷயங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இவை இல்லாவிட்டால், புரோகிராம்கள் இயங் காது. ஒரு ஸ்லிப் ஸ்ட்ரீமிங் சிடி இந்த பிரச்னைகளுக்கு தீர்வினைத்தரும்.
ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டுவிடும். இதனை எப்படி தயாரிப்பது?
இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்ட ஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தை யும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும். இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்கு வதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை http://www.neowin.net/search/news?terms=autostream என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம். இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

Posted On Dec 03,2012,By Muthukumar
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், எப்போதும் வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட்கட் கீகளே பொதுவாக இயங்குகின்றன. இருப்பினும் சில செயல்பாடுகள் புதியனவாகவும், கூடுதல் வசதிகள் தருவதாகவும் அமைந்திருப்பதால், சில ஷார்ட்கட் கீகளுக்கான செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக இங்கு தனி கீகளின் செயல்பாடுகளைக் காணலாம்.
எப்2 தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் மாற்ற
எப்3 பைல் அல்லது டூல் பாரினைத் தேட
எப்4 விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அட்ரஸ் பார் பட்டியலைக் காட்ட
எப்5 அப்போதைய விண்டோவினை ரெப்ரெஷ் செய்திட
எப்6 ஒரு விண்டோ அல்லது டெஸ்க்டாப்பில் காட்டப்படும் ஸ்கிரீன் ஆப்ஜெக்ட்கள் ஒவ்வொன்றாகச் செல்ல
எப்10 இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், மெனு பாரினை இயக்கத்திற்குக் கொண்டு வர
டெலீட் தேர்ந்தெடுத்ததனை அழித்து, ரீ சைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்ல எஸ்கேப் அப்போதைய செயல்பாட்டினை நிறுத்த (தேர்ந்தெடுத்த விண்டோவினை மூட) வலது ஆரோ வலது பக்கம் உள்ள அடுத்த மெனுவினைத் திறக்க / துணை மெனு ஒன்றைத் திறக்க இடது ஆரோ இடது பக்கம் உள்ள அடுத்த மெனுவினைத் திறக்க / துணை மெனு ஒன்றைத் திறக்க