வெள்ளி, 13 ஜனவரி, 2012

டொமைன் பெயர் வாங்குவதன் பின்விளைவுகள்

Posted On Jan 13,2012,By Muthukumar

டொமைன் முகவரி வாங்க வேண்டாம் என்று சொல்லவோ வாங்குங்கள் என்று சொல்லவோ இப்பதிவல்ல. வாங்கும் முன் யோசிக்க வேண்டிய பின் விளைவுகளை மட்டும் பட்டியலிடப்படுகிறது.

களப் பெயர்{Domain Name} என்பது இணைய தளத்தின் இருப்பிடப் பெயர். பெயரிருக்கும் ஒரு இடத்தில் மட்டும் தளத்தை உருவாக்குவது கடிது, உருவாக்கிய எல்லாயிடத்திலும் பெயர் வைப்பது அரிது. அதனால் தான் இரண்டும் வேறு வேறு நிலைகளில் செயல்படுகிறது. இணையதளம் இருக்குமிடத்தை வலைப்பதிவு வழங்கி[blog server] என்றும் முகவரி வாங்குமிடத்தை பெயர் வழங்கி[Name Server] என்றும் சொல்லலாம். பெயருக்கேற்ப பதிவிடுவதை விட, பதிவிற்கேற்ற பெயர் வைப்பது ஒரு சிறந்த உத்தி. ஆகவே பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையில் டொமைன் பெயரென்பது நிலையானதாகவும் அடிக்கடி மாறுவதாகவும் இருக்ககூடாது. ப்ளாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்கள் இலவசமாக வழங்கும் நிலையில் டொமைன் பெயர் வாங்கும்முன் இதற்கு சரியான தேவையுள்ளதா என ஆராய்வது சிறந்தது.

  • டொமைன் என்பது வருடாந்திர ரீதியாக வாடகைக்கு எடுக்கப்படும் எனவே அந்தப் பெயர் நீங்கள் பணம் கட்டும் வரை தான் செயல்படும். மீண்டும் போடப்படும் ஒப்பந்தமும் குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே நீங்கள் அப்பெயருக்கு வாடகைதாரர் மட்டுமே.
  • ஒப்பந்தம் முடியும் போது மீண்டும் பணம் கட்ட தவறினால், வீட்டை ஜப்தி செய்துவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு அப்பெயர் போக வாய்ப்புள்ளது.
  • ஒரு முறை டொமைன் மாற்றுவதால் பழைய முகவரிகளின் இணைப்பையெல்லாம் இழக்க நேரிடும். இது பிளாக்ஸ்பாட் டூ டொமைன் என்றால் தவிற்கப்படும் அதுவே டொமைனிலிருந்து ப்ளாக்ஸ்பாட் வந்தால் இழப்பு நிச்சயம். இங்கு இணைப்பு எனப்படுவது தேடுதளங்களின் இணைப்பு, அலெக்சா முதலிய தளங்களின் கணிப்பு, மற்றவர் தளங்களில் சுட்டி கொடுத்த கவனிப்பு என எல்லாமும் தவறிவிடும்.
  • டொமைன்(Domain) ஹைஜாக் மற்றும் டி.என்.எஸ்.(DNS) ஹைஜாக் போன்ற வெளிநபர் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை கொண்டதா என்று நீங்கள் வாங்கும் நிறுவனத்தைப் பார்க்கவேண்டும். இதுயில்லாதபோது சிக்கல்தான்.
  • ஆரம்ப காலங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் டொமைன் பெயர் விற்கப்படலாம். வாங்கியப்பிறகு விலைஏற்றம் நிகழாலாம். வேறு அதுவரை சேர்த்த இணைய மதிப்பு இழக்க விரும்பாமல் பணத்தை கட்ட நேரிடலாம்.
  • டொமைன் வழங்கும் நிறுவனம் உங்கள் பெயருக்கு தனியான ip தராத நிலையில்[மலிவு விலை], அதே ஐ.பி.யில் இயங்கும் மற்றொரு தளத்தினால் பாதிப்பு வரலாம். உதாரணம் அந்த தளத்தை தடை செய்ய அதன் ஐ.பி.யைப் பயன்படுத்தினால் அது உங்களையும் பாதிக்கும்.
  • அந்த டொமைன் வழங்கி பிறிதொரு காரணத்திற்கு சோர்வடைந்துவிட்டால், உங்கள் டொமைன் முகவரிக்கு தளத்தை திறக்காமல் லொள்ளு செய்யும்.


கமேர்சியலாகவே, தனித்தன்மையுடன் இருக்க விரும்புகிறவர்களோ, தொடர்ந்து எழுதுபவர்களோ, பல வசதிகள் விரும்புகிறவர்களோ தவிர மற்றவர்கள் மறுமுறை யோசித்து களப்பெயர் வாங்க களமிறங்கவும். இறுதியாக டொமைன் முகவரி லாபாமா நஷ்டமா? என்றால் நீங்கள் எதற்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே

*மேல் கண்ட குறைகள் களப் பெயர் வழங்கும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறலாம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக