Posted On Jan 15,2012,By Muthukumar
விண்டோஸ்
கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point
வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு
முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு
உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System
Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு
வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point
உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore
Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.Windows7 கணினிகளில் System Restore Point உருவாக்க:
- முதலில் உங்கள் My computer ஐகான் மீது ரைட் கிளிக் செய்து Properties தேர்வு செய்யவும்.
- அடுத்து System Production என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Create என்பதை அழுத்தவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Description கொடுக்கவும். இன்ஸ்டால் செய்ய போகும் மென்பொருளை பற்றி இருந்தால் ஞாபகம் வைத்து கொள்ள சுலபமாக இருக்கும்.
- அடுத்து உங்கள் கணினியின் Restore Point உருவாக்கப்படும்.
அவ்வளவு தான் உங்களுடைய System Restore Point உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தைரியமாக மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
- Start - All Programs - Accessories - System Tools சென்று System Restore என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து Create a System Restore Point என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்து Description கொடுக்கவும்.
- அடுத்து Create பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் Restore Point உருவாகி விடும்.
இனி உங்கள் கணினியில்
ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உருவாக்கியுள்ள Restore my computer to
an earlier time என்பதை கிளிக் செய்து கணினியை திரும்பவும் பழைய நிலைக்கு
கொண்டுவரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக