வியாழன், 19 ஜனவரி, 2012

சிறந்த ஸ்மார்ட் போன் (Smart phone) தேர்ந்தெடுக்க உதவும் பயனுள்ள தளம்.


 
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் தற்போது ஸ்மார்ட் போன்கள் பெரிய அளவில் மக்களிடம் இடம் பிடிக்கின்றன, குறிப்பிட்ட தேவைகளுக்கு எந்த ஸ்மார்ட் போன் வாங்கினால் விலை குறைவானதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பதை நமக்கு விரிவாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஸ்மார்ட் போன் உலகில் வலம் வரும் iphone , Android, Blackberry, Windows phone போன்ற பல வகையான ஸ்மார்ட் போனில் இருந்து சிறந்த ஸ்மார்ட் போனை நம் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://geekaphone.com
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Any platform என்பதில் நமக்கு தேவையான Platform என்ன என்பதை தேர்ந்தெடுத்து அதன் அருகில் இருக்கும் Up to என்பதில் எவ்வளவு விலைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் தேர்ந்தெடுத்த platform -ல் மற்றும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் நமக்கு காட்டப்படும் ஒவ்வொரு போனிலும் இருக்கும் சேவைகள் என்ன என்பது முதல் மற்ற போனைக் காட்டிலும் இது எவ்வாறு சிறப்பாக இருக்கிறது என்றும் மற்ற போன்களை ஒப்பிட்டு பார்த்தும் நாம் சிறந்த போனை வாங்கலாம், கண்டிப்பாக இந்தப்பதிவு ஸ்மார்ட் போன் வாங்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக