புதன், 11 ஜனவரி, 2012

ஆண்ட்ராய்டு ஜோசியம்

Posted On Jan 11,2012,By Muthukumar

ஆண்ட்ராய்டு ஜோசியம் android mobile

ஆண்ட்ராய்டு O.S பற்றி கேள்விபட்டது முதல் அந்த வசதி உள்ள ஃபோனை பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது.சென்ற மாதம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஃபோன் ஒன்று வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டேன்.ஆண்ட்ராய்டு வசதியில் என்ன முக்கியம் என்றால் நமக்கு தேவைப்படும் அப்ளிகேசனை எல்லாம் உடனே தரவிறக்கி பயன்படுத்தலாம் என்பதுதான்.இதனால் அடிக்கடி ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் நுழைந்து தேடுவது வழக்கமாகி விட்டது.

சாம்சங் பாப் ஃபோன் நான் வாங்கினேன்..ஆனால் இது பாட்டரி ரொம்ப வீக் போல இருக்கு.கொஞ்ச நேரத்தில் இணையம் உபயோகித்தால் செயல் இழந்து விடுகிறது.எல்.ஜி.P500 மாடல் ஃபோன் நன்றாக உழைப்பதாக சொல்கிறார்கள் .கவனிக்கவும்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்கள் டவுன்லோடு செய்ய இணையத்தில் ஆண்ட்ராய்டு மார்க்கெட் என இருக்கிறது.இங்கு சென்று நம் ஃபோனுக்கு என்னென்ன மென்பொருட்கள் தேவையோ அதையெல்லாம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.ஆண்ட்ராய்டு ஓ.எஸ் ல் தமிழ் வேலை செய்வதில்லை.இதற்காக தமிழா மென்பொருள்காரர்கள் அழகான தமிழ்விசை என்னும் மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்கள்.இதனை பயன்படுத்தி அழகாக தமிழ் டைப் செய்யலாம்.இணையத்தில் தமிழ் படிக்க ஒபேரா மினி உலாவி அவசியம்.இவை இரண்டும் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்கியதும் முதலில் நிறுவ வேண்டியவை.

ஆண்ட்ராய்டு ஃபோனில் முக்கியமானவை விதவிதமான கலக்கலான அப்ளிகேசன்கள்தான்.இவை விலைக்கும்,இலவசமாகவும் கிடைக்கின்றன...இலவசம் என்பதால் சப்பை இல்லை..அதுவு பட்டையை கிளப்புகிறது.செய்திகள் படிக்க நான் நியூஸ் ஹண்ட்,தினமலர்,மாலைமலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்கள் பயன்படுத்துகிறேன்.மிக நன்றாக இருக்கிறது.கேம்ஸ் அப்ளிகேசன்கள் விதவிதமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் நீங்கள் என்ன டைப் செய்து தேடினாலும் ஒரு வித்தியாசமான அளிகேசன்கள் கிடைக்கும்.உதாரணத்திற்கு news,games,fly,bird,bike,car என தேடிக்கொண்டே இருக்கலாம்..ஆண்ட்ராய்டு முகப்பு பக்கத்திலும் பிரபலமான இலவ்ச அப்ளிகேசன்கள்,பிரபலமான கட்டண அப்ளிகேசன்கள் என பிரித்து வைத்திருக்கிறார்கள்.அன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு புதிது புதிதாக அப்லோடு ஆகிக்கொண்டே இருக்கிறது.இதனால் இந்த ஓ.எஸ் வேகமாக பிரபலமாகி வருவதாக சொல்கிறார்கள்.நோக்கியா ஷோரூம்களில் எல்லாம் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் இருக்கா இந்த ஃபோன்ல என கேட்டு சேல்ஸ்மேன்களை மக்கள் நோகடிக்கிறார்களாம்.

நோக்கியா வில் நாம் இப்படி அப்ளிகேசன்கன்களை மாற்றிக்கொண்டிருக்க முடியாது.முக்கியமான அப்ளிகேசன்கள் ஃபோனில் இருக்கும்.அவ்வளவுதான்.ஆனால் இதில் நமக்கு தேவையில்லாதவற்றை அழித்துவிட்டு புதிதாக டவுன்லோடு செய்துகொண்டே இருக்கலாம்...

இலவ்ச மென்பொருட்களில் டாப் ஃப்ரீ என மார்க்கெட்டில் இருப்பதை கவனித்து டவுன்லோடு செய்யுங்கள்.எல்லாமே பயனுள்ளவைதான்.

1 கருத்து: