வெள்ளி, 13 ஜனவரி, 2012

விருப்பங்களுக்காக ஒரு வலைப்பின்னல்

Posated On Jan13,2012,By Muthukumar

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்படியே அவற்றை எதற்காக விரும்புகிறீர்கள்.எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்றும் யோசித்து கொள்ளுங்கள்.
காரணம்,இந்த தளத்தில் உங்கள் விருப்பங்களை தான் பகிர்ந்து கொள்ள‌ப்போகிறீர்கள்.ஆம் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான தளம் தான் இந்த மைலைக்ஸ்.விருப்பங்களை பகிர்வது மட்டும் அல்ல ,அதன் மூலமாகவே நண்பர்களை தேடிக்கொள்ளலாம்;நண்பர்களை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே பேஸ்புக் போன்ற தளங்களில் கூட நீங்கள் விரும்பும் விஷயங்களை தான் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்றாலும் கூட இந்த தளத்தை பொருத்தவரை விருப்பங்கள் தான் எல்லாமும்.விருப்பங்கள் மூலம் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.விருப்பங்கள் வாயிலாகவே உங்களை இன்னும் தெளிவாக அடையாளப்படுத்தி கொள்ளலாம்.
பிடித்த புத்த்கம்,விருப்பமான பாடல்,பார்த்து ரசித்த இடங்கள் என்று விருப்பம் எதுவாக இருந்தாலும் அதனை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி விருப்பங்கள் வெளிப்படுத்தி கொள்ள முதலில் உறுப்பினராக வேண்டும்.ஏற்கனவே பேஸ்புக் அல்லது டிவிட்டரில் உறுப்பினராக இருப்பவர்கள் அதை சொல்லியே உறுப்பினராகவிடலாம்.
உறுப்பினரான உடன் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கிவிடலாம்.உங்களுக்கான பக்கத்தில் விருப்புங்களை சேர்க்கவும் என்னும் இடத்தில் கிளிக் செய்தால் விருப்பங்களை பகிர்வதற்கான பகுதி வந்து நிற்கிற‌து.
எதை பிடிக்கும் என்பதை முதலில் உள்ள கட்டத்தில் குறிப்பிட்டு விட்டு அடுத்த கட்டத்தில் ஏன் பிடிக்கும் என்று விளக்கம் அளிக்கலாம்.அதற்கும் கீழே எந்த அளவுக்கு பிடிக்கும் என்ப‌தையும் குறிப்பிடலாம்.இதற்காக என்று உள்ள சித்திர குறியீடுகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பிடித்தமானவற்றை சேர்த்து கொண்டே இருக்கலாம்.தேவையான போது நாமே இவற்றை திரும்பி பார்க்கலாம்.விருப்பங்களை புதிதாக சேர்க்கலாம்,சேர்த்தவற்றை திருத்தலாம் நீக்கவும் செய்ய‌லாம்.
இப்படி நமது விருப்பங்களை பட்டியலிட்டு கொள்வதோடு அவற்றை மற்றவர்க‌ளோடும் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வதில் தான் சுவாரஸ்யமே உள்ள‌து.
நண்பர்களுடன் பேசும் போது இலையராஜாவின் ரசிகர் என தெரிந்தால் எனக்கும் ராஜா தான் பிடிக்கும் என்று சொல்லி மேலும் நெருக்கமாகிவிடுவது உண்டல்லவா?அதே போல தான் இந்த தளத்தின் மூலம் விருப்பங்கள் வாயிலாகவே நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கான பக்கத்தில் விருப்பங்களை பதிவு செய்ததுமே அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்களுக்கும் அதே விருப்பம் இருந்தால் உங்களோடு தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வார்கள்.விருப்பம் சார்ந்த உரையாடலாக அது வளரலாம்.
அதே போல தளத்தில் உள்ள சக உறுப்பினர்களிலும் உங்களைப்போலவே விருப்பம் கொண்டவர்களை தொடர்பு கொள்ளலாம்.அவர்கள் ரசனை ப‌டித்து போனால் அவர்களை பின்தொடரலாம்.அதன் பிறகு அவர்களின் விருப்பங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.இதே போலவே உங்களையும் கூட பலரும் விருப்பம் சார்ந்து பின்தொடரலாம்.
இணைய குழுக்களில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் நாட்டம் கொன்டவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வது போல இதில் விருப்பத்தின் அடிப்படையில் பேசிக்கொள்ளாலாம்.
விருப்பங்களை தெரிவிக்கும் போது பலவிதமான குறிச்சொற்களோடு அடையாள‌ப்படுத்தலாம்.உதாரணத்திற்கு இசை என்றோ இலக்கியம் என்றோ உணவு என்றோ குறிச்சொல்லை இணைக்கலாம்.அனைவரது விருப்பங்களும் இப்படி குறிச்சொற்களாக தொகுத்தளிக்கப்படுவதால் புதிய நண்பர்கள் தேவைப்பட்டால் விருப்பமான குறிச்சொல்லை கிளிக் செய்து அதில் இணைந்துள்ள‌வர்களில் யாரையேனும் பின்தொடர‌லாம்.
எல்லாமே விருப்பம் சார்ந்தது என்பதால் உங்களை தொடர்பு கொள்பவர்களும் உங்களுக்கு பிடித்த விஷயம் பற்றியே பேசக்கூடியவர்களாக இருப்பர்கள்.
அது தான் இந்த தளத்தின் சிற‌ப்பமசம்.
இணையதள முகவரி;https://www.mylykes.com/home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக