ஞாயிறு, 15 ஜனவரி, 2012

போட்டோவில் தேவையில்லாததை எளிதில் நீக்க

  

Posted On Jan 15,2012,By Muthukumar
புகைப்பட கலைஞர்கள் சிரமபட்டு போட்டோ எடுப்பார்கள். நடுவில் குழந்தைகள் தலையோ - கையோ போட்டோவில் வந்துவிடும். போட்டோ நன்றாக இருக்கும். ஆனால் அந்த இடம் சங்கடத்தை கொடுக்கும. அதுபோல அரசியல்வாதி உங்கள் வீட்டுவிஷேஷத்திற்கு வந்துஇருப்பார். அதன்பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கிஇருப்பார்கள். அவருடன் உங்கள் புகைப்படம் இருந்தால் வம்பு அல்லவா?இந்த சின்ன சாப்ட்வேரில அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். அதுபோல் போட்டோவில் தேதி இருக்கும். அதனையும்இந்த சாப்ட்வேர் மூலம் தேதி இல்லாமல் நிவர்த்தி செய்துவிடலாம். குறிப்பிட்ட கலர் தேவையில்லையென்றால் அதனையும் எளிதில் நீக்கிவிடலாம்.இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Add Files மூலம் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தேர்வு செய்யுங்கள். நான் புத்தாண்டு என்பதனை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள ரீமூவ் கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் நொடியில் மறைந்துவிடுவதை காண்பீர்கள். கீழே நான் புத்தாண்டு எடுத்துவிட்ட புகைப்படத்தை காணுங்கள்.
அதைப்போல குறிப்பிட்ட நிறத்தை நாம் தேர்வு செய்துநீக்கிவிடலாம். கீழே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.நான் வெற்றிலையை நீக்க பச்சை நிறத்தை தேர்வு செய்துள்ளேன்.
 வெற்றிலையை நீக்கியவிடன் வந்துள்ள புகைப்படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கு தேவையானதை நீக்கி பயன்படுத்தி பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக