செவ்வாய், 16 டிசம்பர், 2014

வேலைத்திறனை அதிகரிக்கும் 10 ஆப்ஸ்கள் !


எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.
10 ஆப்ஸ்கள் இதோ:
ட்ரெல்லோ!
நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளைக் குறித்த நேரத்தில் கச்சிதமாக செய்துமுடிக்க இந்த ஆப்ஸ் நிச்சயம் உதவும். இந்த ஆப்ஸை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலை களைப் பதிவு செய்துவிட்டால், அதுவே சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டிவிடும்.அதுமட்டுமின்றி உங்கள் அலுவலகத்தில் உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பட்டியலிட்டு, அதை அவர்களுக்கு அனுப்பிவிட்டால், அந்த வேலையைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு நினைவுபடுத்தும். வேலை முடிந்து அவர்கள் அப்டேட் செய்தவுடன் அந்தத் தகவலும் உங்களுக்கு வந்துசேரும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஆப்ஸ் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.trello
இன்பாக்ஸ் பை  ஜி-மெயில்:
கூகுள் மெயிலான ஜி-மெயிலுக்காக தனியொரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது கூகுள். இதைப் பயன்படுத்தி மற்ற மின்னஞ்சல் சேவை களான யாகூ, ஹாட்மெயில் போன்றவற்றில் ஒருவர் வைத்திருக்கும் கணக்குகளையும் இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு வரும் மெயில்்களையும் இதில் பெற முடியும். பதிலளிக்க வும் முடியும். ஒரே ஆப்ஸ் அனைத்து மெயில்களை யும் பெறுவதால், தனித்தனியே ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆப்ஸ் வெளியாகி ஒரு மாதமே ஆகியிருந்தாலும், 50 லட்சத்துக்கும் அதிகமான வர்கள் இதை  டவுன்லோடு செய்து   பயன்படுத்து கின்றனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inbox
ஸ்வைப் கீபோர்டு:
முன்பு எஸ்எம்எஸ் அனுப்ப பட்டன்கள் உள்ள கீபோர்டுகளைப் பயன்படுத்தி வந்தோம். அடுத்து, ஸ்மார்ட் போன் ஸ்கிரீனில் தொடுதிரையைப் பயன்படுத்தி டைப் செய்தோம். அதற்கடுத்து டிக்‌ஷனரி ஆப்ஷன் மூலம் வார்த்தைகளைத் தேர்வு செய்தோம்.  தற்போது கீபோர்டில் நாம் டைப் செய்ய வேண்டிய வார்த்தையை அந்த எழுத்துக்களில் வைத்து ஸ்வைப் செய்தாலே போதும் அந்த வார்த்தை டைப் ஆகிவிடும் .
ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட சில மொழி களிலும் வார்த்தைகளை அடையாளம் காணும் இந்த ஆப்ஸ் இன்னும் சில மொழிகளுக்கும் அப்டேட் செய்யப்பட உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.dtc
கூகுள்அனலிடிக்ஸ்:
நாம் செய்யும் வேலைகள் சரியான வேகத்தில் உள்ளதா, அந்த வேலையை இதே வேகத்தில் சென்றால், நம் டார்கெட்டை முடிக்க முடியுமா என்பதை அனலைஸ் செய்து, எக்ஸ்எல் மற்றும் பிடிஎஃப் ஃபைல்களாக வழங்குகிறது கூகுளின் அனலிடிக்ஸ் ஆப்ஸ். உங்கள் அலுவலக இணையதளங்களை இதனுடன் இணைத்துக்கொள்வதன் மூலம் எத்தனை பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர், அதில் குறிப்பிட்ட ஒரு பிரிவை எத்தனை பேர் பார்த்துள்ளனர்  என்பதையும் சொல்கிறது இந்த ஆப்ஸ்.
ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.2 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.giant
வுண்டர்லிஸ்ட்:
நாம் செய்யும் வேலைகள் சிலவற்றை நாம் மறந்துவிடுவோம். சிலசமயம் வேலைகளைத் தாண்டி இன்று உறவினர் ஒருவருக்குப் பிறந்தநாள், ஒரு முக்கியமான நபரை வியாபார ரீதியாகச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருப்போம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வுண்டர்லிஸ்ட் ஆப்ஸ் உதவுகிறது. நமது தினசரி வேலைகள், சந்திக்க வேண்டிய நபர்கள் மற்றும் மறக்கக்கூடாத தினங்களைப் பதிவு செய்துவிட்டால், சரியாக நமக்கு நினைவுபடுத்தி நமது வேலைகளை மறக்காமல் செய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும்
இந்த ஆப்ஸை இதுவரை 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். 5-க்கு 4.4 ரேட்டிங்கையும் இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wunderkinder.wunderlistandroid
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மொபைல்:
நாம் தயாரிக்கும் வேர்டு டாக்குமென்ட்டுகள், பவர் பாயின்ட் ஸ்லைடுகள், எக்ஸ்எல் படிவங்கள் ஆகியவற்றை மொபைல் மூலமாகவே தயாரித்து, நீங்கள் அனுப்ப நினைக்கும் நபருக்கு மெயில் மூலமாக அனுப்ப முடியும். நாம் கணினியில் செய்யும் அனைத்து ஆபீஸ் வேலை களையுமே இதில் செய்ய முடியும். இது ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4 ரேட்டிங்கை இந்த ஆப்ஸ் பெற்றுள்ளது.  இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub
இன் 5:
பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களுக்குள் சென்று அங்கேயே மணிக்கணக்கில் தங்கிவிடுகிறார்கள். இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள்கூட பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வதுதான் இந்த ஆப்ஸ். இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துவிட்டால், எந்த சமூக வலைதளத்திலும்  சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களை இருக்க அனுமதிக்காது. காரணம், ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலைதளத்தை உங்கள் கம்ப்யூட்டர் திரையிலிருந்து இந்த ஆப்ஸ் காணாமல் அடித்துவிடும்.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. 5-க்கு 4.3 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய:https://play.google.com/store/apps/details?id=sariodev.in5.app
ட்ராப் பாக்ஸ்:
செல்போனில் டவுன்லோடு செய்யும் புகைப்படம், வீடியோக்களை மெமரி கார்டுகளில் இடம் இல்லை என அழித்துவிடுவோம். அல்லது இ-மெயில்களில் இருந்து டவுன்லோடு செய்த ஃபைல்களில் சிலவற்றைகூட மறந்து போய் நீக்கி்விடுவோம். அதனைச் சேமித்து வைக்கத்தான் இந்த ட்ராப் பாக்ஸ் ஆப்ஸ் உதவுகிறது.
அதுமட்டுமின்றி, இதனை மற்றவர்களோடு பகிரவும், டிராப் பாக்ஸிலேயே மாற்றி எடிட் செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.
இந்த ஆப்ஸ் ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இதன் அளவு நாம் பயன்படுத்தும் போனை பொறுத்து மாறுபடும்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.dropbox.android
க்ளீன் மாஸ்டர்:
நமது செல்போனில் நாம் சேமிக்காமலேயே நிறைய பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அதனை ‘cache’ மெமரி என்பார்கள்.
இது குறிப்பிட்ட அளவுக்குமேல் சேர்ந்தால், நமது செல்போனின் வேகம் குறையும். அதனைச் சரிசெய்ய இந்த ஆப்ஸ் உதவுகிறது.
டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்கி, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஃபைல்களை அறிந்து அதனை நீக்க  பரிந்துரைக்கும். ப்ளே ஸ்டோர் ரேட்டிங் 5-க்கு 4.7 பெற்றுள்ளது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆப்ஸை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard
அச்சிவ் (Achive) புரொடக்டிவிட்டி டைமர்:
ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஒரு மிகப் பெரிய புராஜெக்ட் முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்பது வரை கச்சிதமாக கணக்கிட்டு, அந்த வேலையைச் செய்து முடிக்க இந்த ஆப்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த ஆப்ஸில் ஒரு வேலை முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும். அந்த வேலையைச் செய்து முடிக்க  இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்ற தகவல்களை இந்த ஆப்ஸ் துல்லியமாகத் தந்துவிடும்.
இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப டாஸ்குகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியும் இந்த ஆப்ஸில் உள்ளது.  இந்த ஆப்ஸின் மூலம் நம் வேலை செய்யும் திறன் எந்த அளவுக்கு இருக்கும் கணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் 5-க்கு 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=pl.thalion.achieve.productivity.timer

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்


கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.
டாகுமெண்ட் போல்டரில்
பைல் சிஸ்டம் உருவாக்குதல்:
முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது. நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும். சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம். இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.
டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம். ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது. இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும்.

டெஸ்க்டாப்பினைச் சுத்தப்படுத்துக:
 டவுண்லோட்ஸ் போல்டரைப் போலவே டெஸ்க்டாப்பினைப் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், உங்கள் டெஸ்க்டாப், ஒரு ஒழுங்கற்ற மேஜையின் மேல்புறமாகத்தான் இருக்கும். மேலும், இது உங்கள் நேரத்தை வீணாக்கி, பைல்களைத் தேடுகையில் பெரும்பாலான நேரத்தில் மன அழுத்தத்தினைப் கொடுக்கும். எனவே, குறிப்பிட்ட ஒரு நாளில், டெஸ்க்டாப் மேலாக இருக்கும் அனைத்தையும், வேறு ஒரு ட்ரைவில் உள்ள போல்டர்களுக்கு, வகைப்படி கொண்டு அமைத்துவிட்டு, முழுமையான சுத்தமான ஒரு தோற்றத்தை டெஸ்க்டாப்பிற்கு வழங்க வேண்டும். டெஸ்க்டாப்பில் பைல்களை வைப்பது ஆபத்தானதும் கூட. கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரெஸ்டோர் செய்யப்பட்டால், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் திரும்பவும் கிடைக்காது. எனவே, அடிக்கடி, டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை அதனதன் இடத்திற்கு மாற்ற வேண்டும்.

நகல் பைல்களை நீக்குக:
 பல பைல்களுக்கு நாம் நகல்களை உருவாக்கி, வெவ்வேறு போல்டர்களில் சேவ் செய்துவிடுகிறோம். ஒரு சிலர், அதே போல்டரில், அதே பெயரில் 1,2, என எண்களை பைல்களின் பெயர்களுடன் இணைத்து சேவ் செய்து வைப்பார்கள். இது பெரும்பாலும் படம் மற்றும் திரைப்பட பாடல், வீடியோ பைல்களில் நடைபெறும். இத்தகைய நகல்களைக் கண்டறிய பல புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி, நகல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும். இந்த புரோகிராமினை அடிக்கடி பயன்படுத்தி, பைல் நகல்களை அழிக்க வேண்டும். முழு ட்ரைவினையும் ஒரு முயற்சியில் மேற்கொள்ளாமல், படங்கள் மற்றும் வீடியோ பைல்கள் இருக்கும் ட்ரைவ்களில் இந்த செயல்பாட்டினை மேற்கொண்டு, பின்னர், மற்ற ட்ரைவ்களில் மேற்கொள்ளலாம்.
இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் ஹார்ட் ட்ரைவ், தேவையற்ற பைல்களால், தன் செயல்பாட்டினை மந்தப் படுத்திக் கொள்ளாது. முதலில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முயற்சியாக இது இருந்தாலும், போகப் போக, பத்து நிமிடங்களில் முடியும் வேலையாக மாறிவிடும். நமக்கும் நிம்மதியாக இருக்கும். பைல்கள் எந்த ட்ரைவ்களில் உள்ளன என்பதுவும் நினைவில் இருக்கும்.

புதன், 1 அக்டோபர், 2014

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.


http _www.coolphototransfer.com_கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.
இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.
இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.
இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.
டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

வியாழன், 11 செப்டம்பர், 2014

பைல்களை மொத்தமாகத் திறக்கl


ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திறந்து வேலை செய்தால் தான் உங்கள் மேலதிகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ்வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்களையும் ஒவ்வொன்றாகத் திறப்பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வேளைகளில் தவறான பைலைத் திறந்துவிடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி,ஒரே நேரத்தில் அனைத்து பைல்களையும் திறந்து பயன்படுத்த ஒரு வழி உள்ளது. அது ஒர்க் ஸ்பேஸ் எனப்படும் வழியாகும்.
அனைத்து ஒர்க்புக்குகளையும் வரிசையாகத் திறக்கவும். இப்போது File மெனுவில் Save Workspace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஒர்க்ஸ்பேஸ் பைலுக்கு நீங்கள் அடையாளம் காணும் வகையில் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். இந்த பெயரில் திறந்துள்ள அனைத்து பைல்களும் சேவ் செய்யப்படும். ஆனால் வழக்கமாக ஒரு எக்ஸெல் பைல் .துடூண் என்ற துணைப் பெயருடன் சேவ் செய்யப்படும். இந்த ஒர்க் ஸ்பேஸ் பைல் .துடூதீ என்ற துணைப் பெயருடன் சேவ் செய்யப்படும். நீங்கள் இந்த பைல்களை அனைத்தையும் ஒரு சேரத் திறக்க வேண்டும் என எண்ணுகையில் இந்த ஒர்க் ஸ்பேஸ் பைலைத் திறந்தால் போதும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை வேறு ஒரு போல்டருக்கு நகர்த்திவிட்டால், பின் இந்த பைல் கிடைக்காது.

வேர்ட் டேபிள் அளவை மாற்றிட


Posted By Muthukumar On Sep 11,2014
நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்கிப் பயன்படுத்த முதலில் டேபிளை இன்ஸெர்ட் செய்கிறோம். இதற்கு இன்ஸெர்ட் மூலமும் செல்லலாம்; அல்லது டேபிள் மெனு சென்று டேபிள் பிரிவில் கிளிக் செய்தும் மேற்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைப்பது என்ன? சிறிய கட்டங்களில் ஒரு சிறிய டேபிள். நாம் கொடுத்த எண்ணிக்கையில் நெட்டு வரிசையும் படுக்கை வரிசையும் இருக்கும். இது நிச்சயம் நாம் அமைக்க இருக்கும் தகவலுக்குச் சரியாக இருக்காது. எப்படி இதனைச் சற்றுப் பெரிதாக்கலாம். எளிய வழி ஒன்றை வேர்ட் அமைத்துள்ளது. கிடைத்த டேபிளை இந்தக் கண்ணோட்டத்துடன் கவனித்துப் பாருங்கள். இடது பக்கம் மேலாக மூலை மற்றும் வலது பக்கம் கீழாக மூலை – இவை இரண்டிலும் சற்று வித்தியாசமான முறையில் சுழிகள் காணப்படும். இவைதான் உங்களுக்கான திறவு கோல்கள். அதன் அருகே உங்கள் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர் சற்று வித்தியாசமான தோற்றத்திற்கு மாறும். அப்படியே மவுஸை இடது பட்டனில் அழுத்திப் பிடித்தவாறே இழுத்துவிடுங்கள். டேபிளில் கட்டங்கள் மற்றும் வரிசைகளின் அளவு மாறும். உங்கள் தேவைக்கு எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்த அளவில் வைத்து மவுஸை விடுவிக்கவும். இந்த அளவு போதவில்லை என்று எண்ணினால் மீண்டும் அதே போல் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து அமைக்கவும். இடது பக்கம் மேலாக உள்ள இடத்தில் மவுஸை இழுத்து விட்டால் டேபிளை எந்த இடத்தில் அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைக்கலாம்.
வண்ணங்களில் டேபிள் உருவாக்கம்: வேர்ட் பயன்படுத்துகையில் நம் ஆவணங்களில் நிச்சயமாய் டேபிள்களை உருவாக்கி நாம் சொல்ல வந்ததைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் காட்ட விரும்புவோம். பலர் முதலில் டேபிள் தரும் ஒரே கட்ட அமைப்பில் மட்டுமே டேபிள்களை அமைக்கின்றனர். டேபிள்களை பல வகைகளில் கண் கவரும் வகையில் அமைக்கலாம். ஒரு சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்தால் இது கிடைக்கும்.
முதலில் டேபிளை அதன் சாதாரண கோடுகளில் உருவாக்கிவிட்டுப் பின் அவற்றிற்கு அழகான வடிவம் கொடுக்கலாம். என்ன மாதிரி வடிவங்கள் உள்ளன. அவை எப்படி தோற்றமளிக்கும் என வேர்ட் முன் மாதிரியாகக் காட்டிவிட்டு பின் நாம் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைத்துக் கொடுக்கும். குறிப்பாக அச்செடுக்கையில் இவை அழகாகத் தோற்றமளிக்கும். இவற்றை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்?
முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table Auto Format என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
வேர்ட் புல்லட் பாயிண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும், கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும், புல்லட் பாய்ண்ட்ஸ் பயன் படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்


undefined
முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில்
மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.
இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). இதனைhttp://www. partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.
இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:
1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.
3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம்.
3. பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.
4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம்.
5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.
6. பிரிவுகளை இணைக்கலாம்.
7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம்.
8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.
9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.
10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.
12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.
இன்னும் சில சிறப்பான பணிகளை இதில் எளிதாக மேற்கொள்ளலாம். அவை:
1. NTFS வகையிலிருந்து FAT வகைக்கு மாற்றுதல்.
2. எழுத்துருவினை மாற்றுதல்.
3. MBR வகை டிஸ்க்கினை GPT டிஸ்க்காக மாற்றுதல்.
4. GPT வகை டிஸ்க்கினை MBR டிஸ்க்காக மாற்றுதல்.
5. டைனமிக் டிஸ்க் வால்யூமினை காப்பி செய்தல்.
6. UEFI பூட் டிஸ்க்கினை காப்பி செய்தல்.
7. UEFI பூட் செயல்பாட்டிற்கான சப்போர்ட் வழங்குதல்.
8. பிரிக்கப்பட்ட பார்ட்டிஷன் ஏரியாவை நீட்டுதல்.
9. ஒரு பார்ட்டிஷனை எளிதாக இரண்டாகப் பிரித்தல்.
10. 4096 பைட் அடங்கிய செக்டார் அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் அமைத்தல்.
11. எந்த பார்ட்டிஷனையும் உருவாக்குதல், பார்மட் செய்தல் மற்றும் நீக்குதல்.
12. டேட்டா இழப்பு எதுவுமின்றி, க்ளஸ்டர் அளவினை மாற்றி அமைத்தல்.
13. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களுக்கு சப்போர்ட்.
14. உங்களுடைய டிஸ்க்கிற்கு என்ன நடக்கப் போகிறது என்ற காட்சியைக் காட்டி, பின்னர் உறுதி செய்த பின்னரே, அந்த செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்.
15. இரண்டு டெரா பைட் அளவிலான டிஸ்க்கினையும் ஒரே பார்ட்டிஷனாக அமைத்து சப்போர்ட் செய்தல்.
16. மாஸ்டர் பூட் ரெகார்டினை (MBR) மீண்டும் அமைத்தல்.
17. பார்ட்டிஷனின் சீரியல் எண்ணை மாற்றி அமைத்தல்.
இவை தவிர, வழக்கமான பல டிஸ்க் சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்ட இணைய தளத்திலிருந்து, இந்த புரோகிராமினை (MiniTool Partition Wizard) இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில்,மிக எளிதாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்தவுடன், டெஸ்க்டாப்பில் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதில் டபுள் கிளிக் செய்து, MiniTool Partition Wizard Home Edition என்னும் இந்த புரோகிராமினை இயக்கலாம். உடன் வலது பக்கம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் பிரிவுகள் அனைத்தும் தெளிவாகக் காட்டப்படும். வலது பக்கம், இவற்றில் நீங்கள் என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தகவல்கள் தரப்படும்.
இடது பக்கம் உள்ள ஹார்ட் டிஸ்க் குறித்த பிரிவில், டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ள இடம், இன்னும் காலியாக உள்ள இடம் குறித்த தகவல்கள் காட்டப்படும்.
இடது பக்கப் பிரிவில், டிஸ்க் ஒன்றினை அப்படியே அதே அளவில், அல்லது கூடுதலான அளவில் காப்பி எடுக்க வழி தரப்பட்டுள்ளது. copy partition மற்றும் copy entire disk என்ற இந்த டூல்களைப் பயன்படுத்தி இதனைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் நகலை, இன்னொரு எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கலாம். மிக மிக எளிதான, கட்டணம் எதுவும் இல்லாத பயனுள்ள டூல் இது. உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் கெட்டுப்போகும் பொழுது, அப்படியே அதன் காப்பி உங்களுக்கு உதவும்.
இதில் தரப்பட்டுள்ள disk surface scan என்ற டூல், டிஸ்க்கில் உள்ள பழுதுகளை அறியப் பயன்படுகிறது. ஹார்ட் ட்ரைவ் அல்லது அதன் பிரிவைத் தேர்ந்தெடுத்து, அடுத்து Surface Test என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் எந்த நிலையில் உள்ளது, எத்தனை இடங்களில் பேட் செக்டார் எனப்படும் பழுதுகள் உள்ளன என்று காட்டப்படும். அதிகமாக பழுது அடைந்திருந்தால், உடனே ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவதுதான் சிறந்த தீர்வு.
ஹார்ட் டிஸ்க் சார்ந்த எக்கச்சக்கமான செயல்பாடு, எளிதான இடைமுக வழிகள், எந்தக் கட்டணமும் இல்லாத பொருள் என இந்த MiniTool Partition Wizard புரோகிராம், அனைவரும் விரும்பும் புரோகிராமாக உள்ளது. உடனடியாகப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் வைத்துக் கொள்வது நமக்கு என்றும் கை கொடுக்கும்.
இதனைத் தரவிறக்கம் செய்திடவும், இதன் செயல்பாடு குறித்து அறிய, மேலே தரப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

வியாழன், 1 மே, 2014

கம்ப்யூட்டர் மானிட்டரைச் சுத்தம் செய்திடும் வழிகள்


Posted: 1 May 2014 By Muthukumar
பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். 

ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது போலவே தான், நம் வீட்டில் செயல்படும் வண்ணத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகளையும் பராமரிக்கிறோம். பல வேளைகளில், கண்ணாடியில் படிந்துள்ள கறைகளைப் போக்கும் சொல்யூசன்களைப் பஞ்சு அல்லது துணியில் நனைத்து, இந்த திரைகளைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். 

இது சரியா? இல்லை எனில் சரியான வழி என்ன என்று இங்கு பார்க்கலாம். கீழே என்ன என்ன வழிகளை மேற்கொள்ளலாம்; எவற்றை மேற்கொள்ளக் கூடாது எனத் தரப்பட்டுள்ளது.


மேற்கொள்ளக் கூடாதவை: 

ஏரோசால் எனப்படும் கிளீனர் சொல்யூசன்களைத் திரையின் மீது ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யக் கூடாது. சிறிய அளவில் வெதுவெதுப்பான நீர் தவிர வேறு எதனையும் கொண்டு, திரைகளைச் சுத்தம் செய்தல் அதற்கு தீங்கு விளைவிக்கும். 

இது தவிர எந்த வேறு ஒரு திரவத்தினையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு திரவத்தினையும் நேரடியாகத் திரை மீது தெளித்தலும் கூடாது. 

சுத்தம் செய்திட கனமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. திரையில் எளிதில் நீங்காத கறை இருந்தால், அதனை நம் நகம் அல்லது கூரான வேறு சாதனம் பயன்படுத்தி நீக்கக் கூடாது. 


மேற்கொள்ளக் கூடியவை: 

மெல்லிய, உலர்ந்த, கறை எதுவும் இல்லாத, முடிந்தால் மைக்ரோ பைபர் இழையிலான துணி கொண்டு தான், இந்த வகை திரைகளைச் சுத்தம் செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நீர் மற்றும் மென்மையான சோப் கலந்த நீர் கொண்டு சுத்தம் செய்திடலாம். 

முதலில் உலர்ந்த மெல்லிய துணி கொண்டு சுத்தம் செய்திடவும். இதற்கு சில அழுக்குகள் போகவில்லை என்றால், இரண்டு தனி துணிகளை எடுத்துக் கொள்லவும். 

சிறிய அளவில் மென்மையான சோப் கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு துணியை இதில் சிறிய அளவில் நனைத்து திரையைச் சுத்தம் செய்திடவும். 

பின்னர், அதனையே நீரில் சோப் நீங்கும் அளவிற்கு அலசி, பின்னர் நன்றாகப் பிழிந்து, அதனைக் கொண்டு சுத்தம் செய்திடவும். இறுதியாக, உலர்ந்த இன்னொரு துணியைக் கொண்டு சுத்தம் செய்திடவும். 

ஐ பேட் போன்ற சாதனங்களின் திரையைச் சுத்தம் செய்திடவும் இந்த வழிகளைப் பின்பற்றலாம்.

சனி, 19 ஏப்ரல், 2014

எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்:

By muthukumar on 

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப் படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.
அவசிய சுருக்கு வழிகள்: எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கியமானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.
Control + “C”: Copy
Control + “X”: Cut
Control + “V”: Paste
F2:அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)
F5: Go to
F11:உடனடி சார்ட் கிடைக்க
Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.
Control + F3: பெயரை டிபைன் செய்திடலாம்.
Control + "+”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை இடைச் செருகும்.
Control + "”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.
Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + Space: முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + "!” (அல்லது Control + Shift + "1”): எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் பார்மட் செய்திடும்.
Control + "$” (அல்லது Control + Shift + "4”): கரன்சியாக பார்மட்செய்திடும்.
Control + "%” (அல்லது Control + Shift + "5”): சதவீதத்தில் பார்மட் செய்திடும்.
Control + "/” (அல்லது Control + Shift + "7”): சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.
Control + "-” (அல்லது Control + Shift + "6”): அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.