வியாழன், 19 ஜனவரி, 2012

எக்ஸெல் டிப்ஸ்-தேதிக்கான கிழமை

Posted On Jan 19,2012,By Muthukumar
எக்ஸெல் எழுத்தின் அளவு
மற்ற அப்ளிகேஷன் சாப்ட் வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காண லாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.
தேதிக்கான கிழமை
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், தேதியை அமைத்தால், அதனை ஒரு பார்முலா மூலம் அந்த நாளுக்கான கிழ்மையாக மாற்றலாம். இதற்கான வழியை எக்ஸெல் கொண் டுள்ளது. எடுத்துக் காட்டாக, 2012-வது ஆண்டு ஜனவரி மாதம், 02-ம் தேதி என்ன கிழமை எனத் தெரிய வேண்டுமானால் ஏதாவது ஒரு செல்லில் =DATE(2012,01,02) என்ற பார்முலாவைக் கொடுக்க வேண்டும். கிடைக்கிற விடையை ரைட்-கிளிக் செய்து Format Cells கட்டளையைத் தேர்வு செய்திட வேண்டும்.. Number டேபைக் கிளிக் செய்து அதிலுள்ள Custom என்பதை Categoryன்கீழ் தேர்வு செய்த பின்னர், Type என்பதில் dddd என டைப் செய்து OK செய்தால், கிழமை தெரியும்.
எக்ஸெல் - சில ஷார்ட்கட் வழிகள்
Ctrl1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
f2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும்.
CtrlPage Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம்.
CtrlPage Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
CtrlShift”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
CtrlR: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
CtrlD: கர்சர் உள்ள செல்லில் பதியப் பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப் படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl‘: செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.
Ctrl$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக