Posted On Jan 23,2012,By Muthukumar
இணையத்தில்
கொட்டிக்கிடக்கும் தகவல்களை நமக்கு சரியாக கண்டறிந்து தரும் வேலையை
தேடியந்திரங்கள் செய்கின்றன. இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள்
இருந்தாலும் தேடல் முடிவுகளை துல்லியமாக காட்டுவதால் அனைவரும் கூகுளையே
விரும்புகின்றனர். அதே சமயம் நாம் கூகுளில் முக்கியமான ஒன்றை தேடுவோம்,
எவ்வளவு தேடியும் நம்மால் சரியான முடிவை பெற முடியில்லை ஆனால் உங்களின்
சந்தேகத்திற்கு சரியான தீர்வு உங்கள் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அந்த சந்தேகங்களை கூகுளில் இருந்தே நேரடியாக கூகுள் பிளஸ் நண்பர்களிடம்
கேட்கும் வசதியை கூகுள் தளம் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை எப்படி
உபயோகிப்பது என பார்ப்போம்.
எப்பொழுதும் போல நீங்கள் கூகுளில் ஏதோ
ஒன்றை தேடுவதாக வைத்து கொள்வோம். உங்கள் தேடல் முடிவுகளுக்கு கீழே
பாருங்கள் ஒரு புதிய வசதியை காண்பீர்கள்.
மேலே
படத்தில் அம்பு குறியிட்டு காட்டி இருக்கும் Ask on Google+ என்ற லிங்கில்
கிளிக் செய்தால் கூகுள் பிளசின் sharing விண்டோ ஓபன் ஆகும்.
உங்களின்
கேள்வியை கேட்க விரும்பும் வட்டத்தை தேர்வு செய்து கொண்டு ASK என்பதை
கிளிக் செய்தால் போதும் உங்களுடைய கேள்வி உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில்
பகிரப்படும். நீங்கள் பகிர்ந்த பதிவை கூகுள் பிளஸ் தளத்திற்கு சென்று
பார்த்து கொள்ளலாம். இல்லை எனில் இதில் உள்ள View Post என்பதை கிளிக்
செய்தால் நீங்கள் பகிர்ந்த பதிவை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக