வெள்ளி, 20 ஜனவரி, 2012

இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம்.

Posted On Jan 20,2012,By Muthukumar

இணைய உலகில் பல நேரங்களில் நம் பதிவுகளை குறிப்பிட்ட சில மிகப்பெரிய இணையதளம் காப்பி (Copy) செய்து வெளியீட்டு இருக்கலாம் இதை தேடுவது பெரிய வேலையாக இருந்தாலும் நம் தகவல்கள் குறிப்பிட்ட தளத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்று நொடியில் தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சில மணி நேரம் செலவு செய்து நாம் உருவாக்கும் கட்டுரைகளை அப்படியே காப்பி செய்து சில தளங்களில் அவர்களின் பெயர்களை போட்டு வெளியீட்டு வருகின்றனர் ஒரு குறிப்பிட்ட தளத்தில் நம் பதிவுகள் இருப்பது போல் தோன்றினால் உடனடியாக நாம் இத்தளத்திற்கு சென்று  கண்டுபிடிக்கலாம்.
இணையதள முகவரி : http://www.duplicatecontent.net
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி URL 1 என்று இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் அடுத்து இருக்கும் URL 2 என்ற கட்டத்திற்குள் எந்த இணையதளம் நம் தளத்தின் பதிவுகளை காப்பி செய்தது போல் தோன்றுகிறதோ அத்தளத்தின் முகவரியை கொடுத்து Check என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் எத்தனை சதவீதம் நம் பதிவுகளை காப்பி செய்து வெளியீட்டு இருக்கின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம் இதனுடன் ஒரே மாதிரி வார்த்தைகள் எத்தனை சதவீதம் பயன்படுத்தியுள்ளனர் என்ற அனைத்து தகவல்களையும் நொடியில் தெரிந்து கொள்ளலாம் நம் பதிவுகள் எந்ததளத்திலாவது காப்பி செய்யப்பட்டிருப்பதாக தெரிந்தால் உடனடியாக நாம் இத்தளத்தின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம் அவர்கள் மேல் சட்டப்படி ஆதாரத்துடன் நடவடிக்கையும் எடுக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக