சனி, 21 ஜனவரி, 2012

அட்சென்ஸ் பயனாளிகளுக்கு புதிய வசதி கூகுள் வெளியிட்டது - Adsense Publisher Toolbar

Posted On Jan 21,2012,By Muthukumar
இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள், ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்புவது கூகுள் அட்சென்ஸ் விளம்பர சேவையாகும். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் அட்சென்ஸ் தான். தற்பொழுது கூகுளின் அட்சென்ஸ் விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் தீட்டி வருகின்றன. நாளுக்கு நாள் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வர முக்கிய காரணமாக இருப்பது கூகுள் அட்சென்ஸ் என்றால் மிகை அல்ல.


அட்சென்ஸ் உபயோகிப்பவர்கள் தங்களின் ஸ்டேடஸ் பார்க்க ஒவ்வொரு தடவையும் அட்சென்ஸ் தளத்தின் லாகின் செய்து பார்க்க வேண்டும். பிளாக்கர் கணக்கு ஒரு ஈமெயில் ஐடியில் இருக்கும், அட்சென்ஸ் ஒரு ஐடியில் இருக்கும் ஒவ்வொரு முறையும் signout செய்து வேறொரு ஐடிக்கு சென்று பார்க்க வேண்டும் இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூகுள் நிறுவனம் அட்சென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு ஒரு புதிய டூல்பாரை அறிமுக படுத்தி உள்ளது. இந்த க்ரோம் நீட்சியை உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்து கொண்டால் ஒவ்வொரு முறையும் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைய வேண்டிய அவசியமில்லை.


Today Earnings, Yesterday Earnings, Current month Earnings மற்றும் Last month Earnings என அனைத்தையும் அட்சென்ஸ் தளத்திற்கு செல்லாமலே பார்த்து கொள்ளலாம். இவைகள் மட்டுமின்றி இது வரை நீங்கள் அட்சென்ஸ் மூலம் சம்பாதித்த மொத்த தொகை மற்றும் Top Channel ஆகியவையும் இந்த நீட்சியின் உதவியுடன் காணலாம்.

நீட்சியை இணைப்பது எப்படி:
  • முதலில் இந்த லிங்கில் Adsense Publisher Toolbar சென்று குரோம் நீட்சியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகியவுடன் அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Allow என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் உங்களின் அட்சென்ஸ் ஐடியை தேர்வு செய்து கொண்டால் இறுதியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

அவ்வளவு தான் இனி எந்த இடத்தில இருந்தும் எப்பொழுது வேண்டுமானலும் இந்த நீட்சியில் கிளிக் செய்து அட்சென்ஸ் ஸ்டேடஸ் பார்த்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக