ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நேர்மையான ,தூய்மையான,நட்பான தேடியந்திரம்.


posted On Jan 22,2012,By Muthukumar


நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமா?அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா?
ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர உலகின் நிஜங்கள்.யாரும் பொருட்படுத்தாத நிஜங்கள்.
முன்னணி தேடியந்திரங்கள் குக்கீஸ் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத சாப்ட்வேர் துணுக்குகளை உங்கள் கம்ப்யூட்டரின் இதயத்தில் அதாவது ஹார்ட் டிரைவில் ஓளிய வைத்து இணைய உலகில் நீங்கள் தேடலில் ஈடுபடும் போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து கொண்டே இருக்கின்றன.கண்காணிபதோடு நிற்பதில்லை.உங்கள் இணைய பழக்க வழக்கங்கள் கவனிக்கப்பட்டு அடையாளம் காணப்படுகின்றன.
இந்த விவரங்கள் இகாமர்சை நம்பியிருக்கும் நிறுவங்களுகு விற்கப்படுகின்றன.இந்த பழக்கத்திலும் கூகுல் தான் முதலிடத்தில் உள்ளது.சொல்லப்போனால் கூகுல் தான் குக்கீசை முதலில் பயன்ப‌டுத்த துவங்கிய தேடியந்திரம்.இந்த குக்கீகள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு அடையாள் எண்ணை ஒட்ட வைத்து அதன் பிறகு ஒவ்வொரு தேட நடவடிக்கையையும் பதிவு செய்து கொண்டே இருக்கிறது.உங்களுக்கு கூட நீங்கள் எந்த தளத்திற்கெல்லாம் சென்றீர்கள் ,அவற்றில் எந்த வகையான தகவல்களை தேடினீர்கள் என்பது நினைவில் இருக்காது,ஆனால் கூகுலுக்கு உங்கள் மொத்த தேடல் வரலாறும் அத்துப்படி.
உங்கள் இண்டெர்நெட்டின் ஐபி முகவ‌ரி,நேரம்,தேடல் பதங்கள் ,பிரவுசர் தகவல்கள் எல்லாவற்றையும் கூகுல் சேகரித்து கொள்கிற‌து.சும்மாயில்லை 57 வகையான தகவல்களின் அடிப்படையில் கூகுல் விவரங்களை சேகரித்து கொள்கிற‌து.
கூகுலில் தேடி அதன் மூலம் ஒரு இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பயன்படுத்திய குறிச்சொல் அந்த தளத்திற்கு அனுப்படுகிறது.கூடவே உங்களை பற்றிய இணைய விவரங்களும் விற்கப்படுகிறது.
உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற தயாரிப்பு அல்லது சேவைகளை வழங்குவதற்காக இந்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அது மட்டுமா இன்சுரன்ஸ் நிறுவன‌ங்களும் கிரிடிட் கார்ட்டு நிறுவங்களும் இவற்றை அலசி ஆராய்ந்து உங்களை பற்றி தீர்மானித்து கொள்கின்ற‌ன.
பாருங்கள் நம்கு தெரியாமலே நம்மைப்பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ப்பட்டு கொண்டிருக்கிற‌ன.
இந்த நிஜங்களை தான் ‘ஸ்டீல்த்’தனது இணையதளத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
ஸ்டீல்த்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை வேறு யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்டால்,ஸ்டீல்த்திற்கு இதில் தனிப்பட்ட நலன் இருக்கிறது,அதனால் தான் தேடல் உலகின் பின்னே உள்ள விபரீதமான விஷயங்களை அது வெளிப்படுத்துகிறது.
அதாவது ஸ்டீல்த்தும் ஒரு தேடியந்திரம் தான்.உடனே அதனால் தான் கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மீது சேறு வாரி பூசுவதாக அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.ஸ்டீல்த சுட்டிக்காட்டுபவை எல்லாமே இணைய உலக‌ நிதர்சன‌ங்கள்.உண்மையில் இணையயவாசிகளின் அந்தரங்க விவர‌ங்கள் சேமித்து வைக்கப்படுவது எதிர் காலத்தில் மிக‌ப்பெரிய பிரச்ச்னையாக உருவாகலாம்.
ஸ்டீல்த் இந்த விஷய்ஙகளை பட்டியல் போட்டு காட்டுவது கூகுலோடு ஒப்பிடும் போது அது எத்தனை நம்பகமான,தூய்மையான,நேர்மையான தேடியந்திரமாக இருக்கிறது என்பதை உணர்த்துவதறகாக தான்!.
ஆம் ஸ்டீல்த்தில் தேடும் போது உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை,தேடல்கள் சேமித்து வைக்கப்ப்டுவதில்லை,ஐபி முகவ‌ரி போன்ற‌வை அறியப்படுவதில்லை .எல்லாவற்றுக்கும் மேல் இது குக்கீ ஒற்றர்களை உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஏவிவிடுவதில்லை.
எனவே ஸ்டீல்த்தை பயன்ப்டுத்தும் போது நீங்கள் தேட மட்டுமே செய்யலாம்.உங்கள் நடவடிகைகள் கண்காணிக்கப்படுவதில்லை.நீங்கள் பின்தொடர‌ப்படுவதில்லை.
ஆக‌வே ஸ்டீல்த்தை பயன்படுத்துங்கள் என்கிறது ஸ்டீல்த்.
ஸ்டீல்த் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேர்ப்பதால் அதனிடம் விற்க ஒன்றுமில்லை.இதனால் விளம்பர வருவாயும் சாத்தியமில்லை.ஸ்டீல்த்தோ அது பற்றி கவலையில்லை.இணையவாசிகளுக்கு தூய்மையான தேடல் அனுபவத்தை தருவதற்காக விளம்பர வருவாயை தியாகம் செய்திருப்பதாக கூறுகிறது.
இதனை ஏற்று பலரும் ஸ்டீல்த் பக்கம் வந்துவிட்டால் வருவாய்க்கான வழி கிடைத்து விடும் என்பது அதன் நம்பிகை.
கூகுலை புறக்கணித்துவிட்டு ஸ்டீல்த்திற்கு தாவலாம் என்பது உங்கள் விருப்பம்.ஆனால் கூகுல் மற்றும் குக்கீஸ் பற்றிய விவரங்க்ள் அறியவாவது இத‌னை பயன்படுத்தி பாருங்கள்.
ஸ்டீல்த் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் அதன் தேடல் தொழில்நுட்பம் பற்றியது.ஸ்டீல்த் முழுக்க முழுக்க சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பயன்டுத்தவில்லை.கொஞ்சம் கூகுல்,கொஞ்சம் பிங்,அவற்றுடன் தனது தொழில்நுட்பம் கலந்து தேடல் முடிவுகளை தருகிறது.
தேடியந்திர முகவ‌ரி;http://usestealth.com/#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக