Posted On Jan 05,2012,By Muthukumar
தொலைபேசி எண்களுக்கு யெல்லோபேஜஸ் போல டிவிட்டர் முகவரிகளுக்கான டைரக்டரியாக டிவெல்லோ உருவாக்கப்பட்டுள்ளது.தொலைபேசி டைரக்டரியில் அகரவரிசைப்படி தொலைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அல்லவா,அதே போல இந்த தளத்தில் டிவிட்டர் முகவரிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
டிவிட்டர் முகவரிகள் அவற்றின் பயனாளிகள் சேர்ந்த துறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த துறையை சேர்ந்தவர்கள் தேவையோ அந்த துறையில் கிளிக் செய்து தேடிகொள்ளலாம்.விளையாட்டு,சமூகம்,செய்தி,பொழுதுபோக்கு,அரசு,கல்வி என பல்வேறு தலைப்புகள் வரிசையாக முகப்பு பகத்திலேயே பட்டியலிடப்ப்ட்டுள்லன.ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான துணை தலைப்புகளும் இருக்கின்றன.
இந்த பட்டியலில் இருந்தும் தேடலாம்.அல்லது குறிப்பிட்ட நபரின் பெயரை வைத்தும் தேடலாம்.வேறு விதமான குறிச்சொல்லையும் பயன்படுத்தி தேடலாம்.
டேடல் பட்டியலில் டிவிட்டர் முகவரி,அவர்களின் இருப்பிடம் டிவிட்டர் பின்தொடர்பாளர் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இடம் பெறுகின்றன.தேடி நபர் கிடைத்துவிட்டால் இங்கிருந்தே அவரை டிவிட்டரில் பின் தொடர்லாம்.
யாருடைய டிவிட்டர் முகவரி தேவை என்றால் மிக சுலபமாக இந்த தளத்திலேயே தேடிக்கொள்ளலாம்.
இந்த தலத்தில் உறுப்பினரானால் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன.முழுமையான டைரக்டரி என்று சொல்ல முடியாது ஆனால் பயனுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
பிரபலங்களுக்கான டிவிட்டர் முகவரி திரட்டிகள் எல்லாம் இருக்கின்ரன.இந்திய டிவிட்டர் முகவரிகளுக்கான திரட்டியும் இருக்கிறது.டிவெல்லோவோ உலகம் தழுவிய டிவிட்டர் திரட்டியாக வியக்க வைக்கிறது.
இணையதள முகவரி;http://www.twellow.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக