புதன், 4 ஜனவரி, 2012

தேவைக்கு ஏற்ப ரீ-சைக்கிள் பின் அளவினை மாற்ற



Posted On Jan 04,2012,By Muthukumar

குப்பைதொட்டியாக இருப்பினும் நாம் வீட்டின் அறைக்கு ஏற்பவே அதனை தேர்வு செய்யவேண்டும. வீடுகளில் குப்பை கொட்ட சின்ன கூடை வைத்திருப்போம். அதே வீட்டின் அறையில் கார்ப்பரேஷனில் உள்ள பெரிய தொட்டியை வைத்தால் நன்றாக இருக்குமா? இடத்தை அடைத்துகொள்ளதா?
அறைக்க ஏற்ப கூடை வைத்தால் அழகாக இருக்கும் அல்லவா? அதைப்போல நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ் அளவிற்கு ஏற்ப நாம் ரீசைக்கிள் பின்னை அமைக்கலாம்.இதனை தேர்வு செய்ய ரீ-சைக்கிள்பின்னை ரைட்கிளிக் செய்து ப்ராபர்டீஸ் தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 வரும் விண்டோவில் Global தேர்வு செய்யவும.எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான ரீ -சைக்கிள் பின் வைக்கவேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தேர்வு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் நமது கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ் தேர்வு செய்து தேவையான அளவினை ஸ்லைடர் மூலம் நிர்ணயிக்கலாம்.இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும்.நாம் பொதுவாக ரீ-சைக்கிள் பின் அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கு ஏற்ப அளவினை நாமே அமைத்துக்கொள்ளலாம் என புதியவர்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா? பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக