Posted on Jan 09,2012,By Muthukumar
இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன் படுத்தத்
தொடங்கியுள்ளனர். அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரு ம் இணையத்திலிருந்து பல்
வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற் றுக்கொள்கின்றனர். அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்றபோதிலும் இணைய த்தில் தீமைகளும் இருக்கவே செ ய்கின்றன.
பொதுவாக
தமது குழந்தைகள் இ ணையத்துடன் இணைந்து இருக் கும்போது பெற்றோர் ஆபாச
தளங்கள், தேவையில்லாத வன் முறைத் தளங்கள், செட்டிங் போன்றவ ற்றில் சென்று
விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள். எனினும் அவர்களால் தமது குழந்தைகளை எந்நேரமும் கண்காணி த்துக்கொண்டு இருக்க முடிவதில்லை.
எனவே தங்களது குழந்தைகளின் பாதுகாப்பான இணைய உபயோக த்திற்கு உறுதி அளிக்கும் உலாவியொ ன்றினைப் பற்றியதே இச்செய்தி. குழந் தைகளுக்கென பிரத்தி யேகமாக உரு வாக்கப்பட்டுள்ள இவ்வுலாவியின் பெ யர் Kidzui. இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற் றை இணைத்திருக்கிறார்கள். அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்ற பின்னரே இதில் இணைக்க ப்பட்டிருக்கின்றது.
இதில் குழந்தைகள் பாதுகாப்பான வீடியோக்களை மட்டுமே பார் வையிடமுடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளும் இதில் உள்ளன.
இதில்
முதலில் பெற்றோர்கள் தங்க ளது கணக்கை உருவாக்கி குழ ந்தைகளைக்
கட்டுப்படுத்துவதற்கான (Parental Controls) அமை ப்பை செய்து கொள்ள
முடியும். இதன்படி உங்கள் குழந்தைகள் இவ் வுலாவியை
மட்டுமே பயன்படுத்தக்கூடியவாறும், கணனி யில் வேறு எதனையும் செய்ய முடியாத
வாறும் செட்டிங்களை மேற் கொள்ளமுடியும். பாதுகாப்பான இவ்வுலா வியை நீங்களும் உங் கள் குழந்தைகளு க்கென தரவிறக்கம் செய்துகொள்ளுங்களேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக