Posted On Jan 11,2012,By Muthukumar
கூகிள்
ஆனது இணையம் பயன்படுத்தும் பாதி பேரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும்
தளம். இணையத்தில்உள்ள இருவரில் ஒருவர் கண்டிப்பாக கூகிள்
பயன்படுத்துபவர்என்று ஒரு கணக்கு சொல்கிறது. அத்தகைய தளத்தில் தேடுவதும்
ஒரு கலையே.
சில சமயங்களில் நாம் முக்கியமான விஷயம் ஒன்றை தேடுவோம் ஆனால் நமக்கு நிறைய தேவை இல்லாத தகவல்தான் கிடைக்கும். சரி எப்படி சரியாக தேடுவது? இதற்கான பதிலைஎன்னுடைய பழைய பதிவு ஒன்றில் கூகிள் தளத்தில் நமக்கு தேவையானதை எளிதாக தேடுவது எப்படி என்று சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சி தான் இந்தப் பதிவு.
அதில் 9 வகையான குறிப்புகள் கொடுத்து இருந்தேன், இனி அதன் தொடர்ச்சி.
10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி?
இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும்.
உதாரணம்:
11. File Format களில் தேடுவது எப்படி?
இது நிறைய பேருக்கு தெரிந்து
இருக்கும்.நீங்கள் தேடும் பொருளின் பின் அந்த Format extension கொடுக்க
வேண்டும். அதாவது pdf file என்றால், .pdf என்று கொடுக்கலாம்.
உதாரணம்:
Eg: Solar Power.pdf
12. ஒரு இடத்தில் நேரம், வெப்பத்தை அறிவது எப்படி?
Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்க்கவும்.
உதாரணம்:
Time Chennai , Chennai Weather
13. கல்வி குறித்து தேடுவது எப்படி?
கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது.அப்போது தேடும் பொருளுக்கு பின் .edu என்று சேர்க்கவும்.
14.கூகிள் கணக்கு பண்ணுமா?
நீங்கள் நினைப்பது போல கூகிள் பொண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள்.
அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.
(24*9)(39+68)(45-21)
15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?
இது மிக முக்கியமானது. உதாரணமாக
எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால்
அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,
Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002
அதாவது,
Type: “[business name or type], [city or zip/postal code]”
Image From: http://funpho.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக