திங்கள், 2 ஜனவரி, 2012

ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற:

Posted On Jan 02,2012,By Muthukumar
ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற:
எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திடவும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும்.
இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம்.
1.ஒர்க் ஷீட்டிற்கான ஷீட் டேபில் ரைட் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் மெனுவில் Move அல்லது Copy என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இதில் To Book என்ற டிராப் டவுண் லிஸ்ட் கிடைக்கும். இதில் புதிய ஒர்க் புக்கும் உருவாக்கலாம்.
4. புதிய ஒர்க் புக்கில் உள்ள ஷீட்களில் எந்த ஷீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் இதனை விட்டுவிடலாம். அல்லது Move தேர்ந்தெடுத்து முடிக்கலாம்.
5. செய்வதற்குப் பதிலாக காப்பி செய்திடத் திட்டமிட்டால் Create a Copy Check Box என்பதில் கிளிக் செய்து செயல்படவும்.
6. அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஒர்க் ஷீட் டேப் கலர் செட் செய்திட:
எக்ஸெல் ஒர்க் ஷீட் டேப்களில் கலர் கொடுப்பதன் மூலம் ஒரே தன்மையிலான ஒர்க் ஷீட்களை நாம் அடையாளம் காண முடியும். எடுத்துக்காட்டாக ஸ்டேஷனரி, பலசரக்கு, செருப்பு மற்றும் ஷூ வகையறாக்களை விற்பனை செய்திடும் கடையில் உருவாக்கப்படும் வித்துமுதல் விற்பனை ஒர்க் ஷீட்களில் மேற்கண்ட ஒவ்வொரு வகைப் பொருளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுப்பதன் மூலம் நாம் அவற்றை எளிமையாக அடையாளம் கண்டு இயக்க முடியும்.
1.முதலில் எந்த ஒர்க் ஷீட்டிற்கான வண்ணத்தை மாற்ற வேண்டுமோ அந்த டேபினைத் தேர்ந்தெடுத்து அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் பாப் அப் மெனுவில் டேப் கலர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Format Tab Color Box என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. கிடைக்கும் பல வண்ண பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
4. ஏற்கனவே அந்த ஒர்க் ஷீட் டேபிற்கு ஒரு கலர் கொடுத்திருந்து அது வேண்டாம் என நீங்கள் எண்ணினால் No Color என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேறு கலர் என்றால் அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக