இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது.
முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.
புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க தருகிறது.இதுவரை 2 ஆயிரம் புத்தகங்களே இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக இந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.
நாவல்களை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாசித்து மகிழலாம்!இதன் பொருள் கம்ப்யூட்டரிலும் வாசிக்கலாம்,லேப்டாப்பிலும் வாசிக்கலாம்,வேரு எந்த வாசிப்பு வசதி கொண்ட சாதனத்திலும் படிக்கலாம் என்பதே.
எந்த புத்தகத்தை படிக்கலாம் என்று தேர்வு செய்து கொள்வது மிகவும் எளிதானது.புத்தகங்கள் பகுதியை கிளிக் செய்தால் புத்தக பட்டியல் அவற்றின் அட்டை படத்தோடு அழகாக தோன்றுகிறது.சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகம்,அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் என்னும் தலைப்பிலும் புத்தகங்களை காணலாம்.
புத்தகத்தை தேர்வு செய்து கிளிக் செய்த பின் ஒரு கணம் திக்குமுக்காடி போக நேரலாம். அந்த அளவுக்கு புத்தகம் சார்ந்த தகவல்களும்,வசதிகளும் இருக்கின்றன.அதற்கு காரணம் இந்த தளம் வெறும் வாசிப்பு தளம் அல்ல.படித்ததை பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் உதவும் தளம் இது.
புத்தக விற்பனை தளமான அமேசான் தளத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்களை தேடும் போது ,புத்தகத்தின் சுருக்கமான அறிமுகம்,அதன் ரகம்,வாசகர்கள் விமர்சனம்,அவர்களின் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களை பார்த்திருக்கலாம்.அதோடு நாமும் விமர்சனம் எழுதி சமர்பிக்கலாம்.
அதே போல தான் இதிலும் புத்தகத்தின் அறிமுக குறிப்பு,அதில் உள்ள அத்தியாயங்கள்,அது எந்த வகையை சார்ந்தது என்ற குறிப்பு,ஏற்கனவே படித்தவர்களின் விமர்சனங்கள்,வாசகர்களின் மதிப்பீடு ஆகிய விவரங்கள் வரவேற்கின்றன.
இவை போதாதென்று குறிப்பிட்ட அந்த எழுத்தாளரின் பிற புத்தகங்கள் மற்றும் அதே போன்ற மற்ற புத்தகங்களின் பட்டியலும் தரப்படுகிறது.புதிய புத்தகங்களை அறிமுக செய்து கொள்ள இதை விட வேறு என்ன வேண்டும்.
புத்தகத்தை பற்றி அப்படியே பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.ஜிமெயில்,வலைப்பதிவு போன்றவற்றிலும் இங்கிருந்தே பகிர்ந்து கொள்ளலாம்.
புத்தகம் நன்றாக இருக்கிறதா ,பிடித்திருக்கிறதா அது பற்றி நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்கலாம்.இந்த தளத்தில் உள்ள உறுப்பினர் குழுக்களிலுல் நுழைந்து விவாதத்தில் பங்கேற்கலாம்.அதற்கேற்பவே தளத்தின் முகப்பு பக்கத்தில் தற்போது யாரெல்லாம் என்ன புத்தகங்களை படித்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
விருபினால் வாகர்களே கூட ஒரு புதிய விவாத குழுவை துவக்கி மற்றவர்களை அழைக்கலாம்.ஏதானும் சந்தேக்ம் இருந்தாலும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம்.
வாசகர் என்ற முறையில் ஒருவருக்கு பிடித்த சிறந்த புத்தகங்களை பட்டியலிடவும் செய்யலாம்.இப்படி சக வாசகர்கள் பட்டியல் மூலம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த அமசங்களை எல்லாம் ரசித்து மகிழ்ந்து விட்டு வாசிப்பதற்கான பட்டனை கிளிக் செய்தால்,இன்னொரு முறை அசந்து போக நேரும்.
காரணம் பல தளங்களில் பார்க்க கூடியது போல புத்தக பக்கங்களின் பிடிஎப் வடிவம் வந்து நிற்காமல் அழகான இபுக் ரீடர் தோன்றுகிறது.வரிசையாக ஒவ்வொரு பக்கமாக படித்து கொண்டே போகலாம்.
படிக்கும் போது ஏதாவது தோன்றுகிரதா,உடனே படித்து கொண்டிருக்கும் பக்கத்தின் அருகிலேயே அந்த குறிப்புகளை எழுதி வைக்கலாம்.இதற்கென தனியே இணைய குறிப்பேடு வசதி உள்ளது.மனதை கவர்ந்த் வரிகளை அடிக்கோடிட்டும் வைக்க முடியும்.
பாதி படித்து கொண்டிருக்கும் போதே வேறு வேலை வருகிறதா,அந்த பக்கத்தை அப்படியே புக மார்க் செய்து விட்டும் போய்விடலாம்.அடுத்த முறை படித்து கொண்டிருந்த பக்கத்தை தேடும் தேவையில்லாமல் அதே பக்கத்தில் இருந்து படிக்க துவங்கலாம்.புத்தகத்திற்கான மதிப்புரையும் எழுதி,மதிப்பீட்டையும் அளிக்கலாம்.இவற்றுக்கெல்லாம்உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுதல் அவசியம்.
ஆக இங்கே புத்தகம் வாசிப்பது என்பது அலுப்புட்டக்கூடிய தனிமையான அனுபவம் அல்ல,நண்பர்களோடு இணைந்து படிக்க கூடிய இனிமையான அனுபவம்.
இதை போன்ற வாசிப்பு அனுபவத்தை செழுமையாக்க கூடிய முழுமையான தளம் வேறில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிற மொழி புத்தகங்களும் இடம் பெற்றிருப்பது இந்த தளத்தின் கூடுதல் சிறப்பம்சம்.
இணையதள முகவரி:http://www.litfy.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக