வியாழன், 5 ஜனவரி, 2012

கண்ணாடிமயமான புதிய வகை சுற்றுலா விமானங்கள் : 2050 இல் பயணிக்கலாம்!



2050 களில் சேவைக்கு வரவுள்ள புதிய வகை  சுற்றுலா பயணிகள் விமானத்தின் மாதிரி வடிவத்தை பிரபல
Airbus விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  விமான இருக்கைகளை சுற்றியுள்ள அனைத்து கூரை பகுதிகளும் முழுவதுமாக கண்ணாடியால் வடிவமைப்பதன் மூலம், விமான பயணிகளுக்கு முகில்களின் மேல் பறக்கும் அனுபவத்தையும் வானத்தில் அந்தரத்தில் மிதக்கும் உணர்வுகளையும் கொண்டுவர போகிறார்களாம்.

வெளி காலநிலைக்கு ஏற்ப விமானத்தில் வெப்பநிலையை சரிசெய்தல், பகல், இரவு காலங்களுக்கு ஏற்பட விமானத்தின் உட்புறத்திலும் வண்ணங்கள், மின் ஒளியை மாற்றல் என முற்றிலும் நவீன மயமாக அறிமுகமாகும் இவ்விமான சேவை பாரிஸில்ருந்து  நியூயோர்க்கிற்கு முதல் உத்தியோகபூர்வ சேவையை தொடங்கும் என்கிறார்கள்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக