Posted On March 8,2012,By Muthukumar
வேர்ட் தொகுப்பில் ரூலரை ஒரு சிலர் மிகவும் கர்ம சிரத்தையாகப் பயன்படுத்துவார்கள். அவை தரும் அளவுபடி படங்களை, கட்டங்களை, அட்டவணைகளை அமைப்பார்கள். பொதுவாக வேர்ட் தொகுப்பில் ரூலர்கள் அங்குல அளவில் தான் தரப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்து ஆட்களுக்குச் சரிப்பட்டு வராது. சென்டி மீட்டரிலேயே அனைத்தையும் அளந்து வரைந்து பழக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக ரூலர் சென்டி மீட்டரில் வேண்டும் என்றால் என்ன செய்வது? எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? தேவையே இல்லை.
அங்குலத்தில் உள்ள ரூலரை எப்படி சென்டிமீட்டருக்குக் கொண்டுவருவது? முதலில் ரூலரை எப்படி பெறுவது? View menu மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ரூலர் கோடு கிடைக்கும். இனி Tools மெனு சென்று Options என்னும் பிரிவில் கிளிக் செய்தால் டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் General என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக “measurement units” என்னும் பீல்ட் தரப்பட்டிருக்கும். அதைக் கிளிக் செய்தால் கீழாக விரியும் மெனு ஒன்று கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி ரூலர் நீங்கள் விரும்பிய அளவு அலகுகளில் கிடைப்பதால் அதனை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக