Posted On March 30,2012,By Muthukumar
தேடியந்திரங்கள் தான் அனைத்து வலைப்பூக்களுக்கும் முதுகெலும்பு என்று
கூறலாம் ஏனென்றால் பெரும்பாலான வாசகர்கள் தேடியந்திரங்கள் மூலமாக தான்
வலைப்பூக்களுக்கு வருகின்றனர். உங்கள் பதிவுகள் தேடலில் முதல் பக்கத்தில்
வர தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை உங்கள் வலைப்பூக்களில்
செய்ய வேண்டும். இது SEO(Search Engine Optimization) என்று
அழைக்கப்படுகிறது. தேடியந்திரங்களில் புகைப்பட தேடல் (IMAGE SEARCH)
என்பதும் முக்கியமான ஒன்று. இந்த பகுதியில் உங்கள் பதிவில் உள்ள
போட்டோக்களை வரவைப்பதன் மூலம் கணிசமான வாசகர்களை பெற முடியும்.
போட்டோக்களில் ALT மற்றும் TITLE tag சேர்ப்பதன் மூலம் Image Search
பகுதியில் நம் பதிவின் போட்டோக்களை வரவைக்க முடியும். இப்பொழுது பிளாக்கர்
தளம் "Image Properties" என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இதன்
மூலம் Title மற்றும் ALT சொற்களை சுலபமாக நம் வலைப்பூ போட்டோக்களுக்கு
கொடுக்கலாம்.
Image Properties பயன்படுத்துவது எப்படி?
முதலில் பிளாக்கரில் New Post பகுதிக்கு சென்று Insert image பட்டனை கிளிக்
செய்து வழக்கம் போல போட்டோவை உங்கள் பதிவில் அப்லோட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த போட்டோ மீது செய்யுங்கள் அதில் Properties என்ற புதிய வசதி இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் TITLE மற்றும் ALT என்ற இரு
கட்டங்கள் காணப்படும் அதில் போட்டோவுக்கு சம்பந்தமான சொற்களை கொடுத்து SAVE
செய்து விடவும்.
இனி உங்களுடைய போட்டோக்கள் சுலபமாக தேடியந்திரங்களில் திரட்டப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக