Posted On March 29,2012,By Muthukumar |
உங்களால்,
விரைவாக, வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? இது என்னங்க முடியாதா?
என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. வண்ணங்களைக் கண்டறிவதில் நாம்
எவ்வளவு வல்லவர்கள் என சோதனை செய்தால் தான் தெரியும். இதற்கென ஓர் இணைய
தளம் http://color.method.ac என்ற முகவரியில் இயங்குகிறது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வண்ணத்திலான ஒரு சக்கரம். விளையாடத் தொடங்கும் முன் நம் கம்ப்யூட்டரின் பிரைட்னஸ், காண்ட்ராஸ்ட் ஆகியவற்றைச் சரி செய்திட வேண்டும். அப்போது தான் இந்த விளையாட்டை நாம் சரியாக விளையாட முடியும். இதனைச் சரி செய்த பின்னர், நாம் விளையாடத் தயார் என்பதனைத் தெரிவித்தவுடன், வண்ணத் திலான ஒரு வளையம் சுழலும். வளையத் தின் நடுவே ஒரு வண்ணம் காட்டப்படும். அதே வண்ணம், சுழலும் வளையத்தில் எங்கு உள்ளது என்பதனை, மவுஸால் சரியாகக் கிளிக் செய்து காட்ட வேண்டும். இங்கு தான் பிரச்னையே உள்ளது. வளையத்தில் வண்ணங்கள் கட்டங்களில் இருக்காது. தொடர்ந்து வண்ணங்கள் பூச்சாகக் காட்டப்படும். அது சுழன்று கொண்டிருப்பதால், சரியான வண்ணம் எந்த இடத்தில் உள்ளது எனக் கணித்து, மவுஸால் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்யப்படும் வண்ணம் தவறாக இருக்கலாம்; ஓரளவிற்கு சரியாக இருக்கலாம்; சரியாக இருக்கலாம் மற்றும் மிகச் சரியாக இருக்கலாம். இந்த முடிவுகள் காட்டப்பட்டு அடுத்த நிலைக்கு நாம் செல்வோம்.
அடுத்த நிலையில், இரண்டு இடங்களில் இந்த வண்ணம் இருக்கும். இரண்டையும் சுட்டிக் காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று முன்னேறுகையில், விளையாட் டில் இன்னும் சற்று கடினமான சவால்கள் தரப்படும். இரண்டு இடங்கள் நான்காக மாறும். இப்படியே சவால்கள் உயரும்.
நீங்கள் வண்ணத்தை பிரித்தறிய முடியாத பார்வைக் குறைவு உள்ளவரா? நீங்களும் இதனை விளையாடும் வகையில், வண்ணங்கள் சில உருவங் களில் தரப்பட்டு, அதனைக் கண்டறியும் வகையில் தரப்படும்.
உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, உங்களுக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இந்த விளையாட்டு தரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக