நாம் எடுத்த புகைப்படங்களை நம் கணினியில் அல்லது சிடி டிவிடி என்று ஏதாவது ஒன்றில் சேமித்து வைத்திருப்போம், பிளிக்கர் , பிகாசா போன்ற தளங்களை போல் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது இந்தத்தளத்தில் நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக பதிவேற்றியும் அதை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இணையதள முகவரி : http://sharypic.com
இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் மேல் இருக்கும் Create my account என்பதை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அதன் பின் நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை மொத்தமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ பதிவேற்றலாம், பதிவேற்றிய பின் அந்த புகைப்படங்களை ஆல்பம் போல் செய்து நம் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனஅனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். பிளிக்கர் பிகாசா போன்ற தளங்களில் இருக்கும் புகைப்படங்களை கூட நாம் இந்தத்தளத்தில் எளிதாக பகிர்ந்து கொள்ள செய்யலாம். புதுமை விரும்பிகளுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இந்தத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக