Posted on March 29, 2012 by muthukumar
உங்கள் இமெயில் கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத மெயில்களெல்லா ம் வந்து குவிந்து உங்கள் மெயில் பொக்ஸை நிரப்புவ தைப் பார்த் திருப்பீர்கள்.
நீங்கள் கேட்காமலேயே உங்க ளிடம் பொருட்கள் அல்லது சேவை களை வழங்குவதற்கு
வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத மெயில்களையே ஸ்பாம் (spam)
எனப்படுகிறது. வேண்டாத இந் தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர்
(spamer) என்பர்.
இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வே ளைகளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிற து.
வர்த்தக நோக்கில் வரும் இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சான்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மென்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல்
போன்ற தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். இந்த தலைப் பைக் கொண்டே இவை ஸ்பாம் அஞ்சல் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சில வேளை வந்த
ஸ்பாம் மெயில் கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில்
போன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்பு டன் வந்தும் உங்களைத் திசை திரு
ப்பக் கூடும்.
ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிர ச்சினைதானா?
கணினி
வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கனினியின்; செயற்பாட்டையோ அல்லது
டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப்
பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.
நீங்கள்
தினமும் நூற்றுக் கணக்கான ,மெயில்களை வாடிக்கையா ளர் களிடமிருந்து
பெருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இவ ற்றுள் எவை ஸ்பாம் மெயில்
என்பதைக் கண்டுபிடித்து அழிப்ப தில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது
நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக மின்னஞ்சல் பெறு பவர்கள்
வேண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோசப்பட்டுக்கொள்ள லாம்.)
சில
வேளை எது ஸ்பாம் எனக் கண் டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய
மெயிலையும் கூட தவ றுதலாக நீங்கள் அழித்துவிட வாய்ப் புண்டு.
எமக்கு
முன்பின் அறியாத ஒரு நபர் எமது கம்பியூட்டரை தனது கட்டுப் பாட்டின் கீழ்
கொண்டு வருவதோடு எமது கணினியிலிருந்தே, ஸ்பாம் அஞ்சல்களை வேறு நபர்களுக்கு
அ னுப்பிவிடுவார்கள். இதனால் யரோ ஒருவர் செய்யும்தவறுக்கு நாமே
பொறுப்பேற்க வேண்டியி ருக் கும்.
ஏன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?
ஸ்பாம்
ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிகக் மிகக் குறைந்த செலவில்
ஆயிரக்கணக்கான மெயில்களை ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள்.
இவர்கள் அனுப் பும் மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே
ஒருவர் மட்டும் ஒரு பொருளை இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால்
அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் , இலா பமடைந்து விடுகிறார்.
ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப் பது எப்படி?
1.
ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மென்
பொருளை நிறு விக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல் களை ஓரளவுக்குக்
குறைத்து விடலாம். அத்துடன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே
முன் கூட்டியே காட்டி விட்டால் மீண்டும் மீண்டும் அதே ஸ்பாம் வரு வதைத்
தடுக்கலாம்.
2.
உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை
அழித்து விடுங்கள். சில வேளை அந்த ஸ்பாம் மெயிலுடன் வைரசும்
சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணினி வைரஸ்
தாக்கத்திற்குள்ளாகலாம்.
3.
ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும்
லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வா று பதிலளிப்பது சரியான ஒரு
முகவரிக்கே நாம் மெயில் அனுப்பி யுள்ளோம் எd;பதை ஸ்பாமருக்கு உணர்த்தி
விடும்.
4.ஸ்பாம்
அஞ்சலில்வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்க ளையோ சேவையையோ பெற்று
விடாதீர்கள். இது மேலும் மேலு ம் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு
மாத்திரமி உமது ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களின் கையிலும் சேர
வாய்ப்புள்ளது.
5.
சில இணைய தளங்களில் படிவங்க ளை நிரப்பும்போது “மேலதிக விவரங் களைப் பெற”
ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண் டியிருக்கும். அதனைத்
தெரிவு செய் யாமல் தவிர்ப்பது நல்லது.
6.
இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களி ல் (Mail Client) உங்களது மெயிலைத்
திறந்து பார்க்காமலேயே அதன் உள்ள டக்கத்தைக் காட்டும் (preview) வசதியு
ள்ளது. இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தாங்கள் அனுப்
பிய ஸ்பாம் உரியவரைச் சென்றடைந்து விட்டதை உறுதிசெய்து கொள்வார்கள்.
அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து
நம்பகமான மெயிலை மட்டும் திற வுங்கள்.
7.
ஒரே மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் ,
இடத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும்
மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு இந்த இமெயில்
அனுப்பியுள்ளீர்கள் என்பதை மறை த்து விடும். மாறாக To பகுதியில் டைப்
செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.
8. உங்கள் மின்னஞ்சல் முகவரிக ளை நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
9.
இணைய தளங்கள் மற்றும் நியூ ஸ் க்ரூப் போன்றவற்றைப் பார் வையிடும் போதும்
இணைய அரட் டையில் ஈடுபடும் போதும் இமெ யில் முகவரிகளை வழங்க நேரிடு
ம் போது மின்னஞ்சல் முகவரிகளி ல் பயன்படுத்தப்படும் “ @ “ எனும்
குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். இந்த “ @ “ குறியீட்டைக்
கொண்டே ஸ்பாமர் கள் பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல்
முகவரி யென கண்டறிந்து கொள்ளும்.
10.
எப்போதும் ஒரே இமெயில் முகவரியை மட்டும் பயன் படுத்தா மால் ஒன்றுக்கு
மேற்பட்ட முகவரிகளை பயன்படுத்துங்கள். உதார ணமாக அலுவலக தேவைக்கென ஒரு
இமெயில் முகவரி, தனிப் பட்ட தேவைக் கென ஒன்று மற்றும்,இணைய தளங்களில்
வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொன்றும் என வெவ் வேறாக
வைத்துக் கொள்ளுங்கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவு க்குத் தப்பிக்
கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக