வியாழன், 29 மார்ச், 2012

உங்களுக்கு தேவையான நேரத்தில் உங்களது கணினியை Start/Shutdown செய்ய...

Posted On March 29,2012,By Muthukumar




நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயங்களில் மறதி காரணமாக   Shutdown செய்ய மறந்து விடுவோம்,அல்லது Download செய்து கொண்டு  இருக்கும் நேரங்களில்   நமது கணினியை Shutdown செய்ய முடியாது.இந்த மாதிரி நேரங்களில் நாம்  குறிப்பிடும் நேரத்தில் நமது கணினியை Shut down அல்லது Restart செய்ய வைக்க முடியும் .அதற்க்கு தேவை ஒரு சின்ன Utility application.


கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து  ஜெர்மானிய மொழியில் இருக்கும் (Zum download)கிளிக் செய்து உங்கள் கணினிக்கு  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


                        Sleeptimer



தரவிறக்கம் செய்த பின் உங்கள்  கணினியில் கீழே இருப்பதை போல் ஒரு சின்ன ஐகான்(Icon) வந்திருக்கும்.




அதனை கிளிக் செய்து ரன்(Run) செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் வரும்.அங்கு உங்களுக்கு தேவையான நேரத்தை தந்து  PLAY கிளிக் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது கணினி shutdown ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரத்தில் Restartம் நீங்கள் செய்து கொள்ளலாம்.













                               
நீங்கள் PLAY ஐகானை கிளிக் செய்தவுடன் பின்னணியில் அது செயல்பட தொடங்கி நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கணினியை இயக்கும். மின்சாரத்தையும் இதன் மூலம் நாம் சேமிக்க முடியும் .நமக்கு தேவையான சமயங்களில் இந்த ஐகானை ரன் செய்து நமக்கு தேவையான நேரத்தில் கணினியை Shutdown அல்லது  Restart  செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக