Posted On March 29,2012,By Muthukumar |
வேர்ட்
டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய
பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான
வழிகளை இங்கு காணலாம்.
வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் - 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் -1, -2,-3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III...
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii ...
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, ...
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, ...
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில்
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக