Posted On March 19,2012,By Muthukumar
ஒரு சில வலைப்பதிவுகளில் எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கி ன்றனர்
என்ற விவரம் தெரிவிக்கப் படு வதை பார்க்க முடியும். ஆனால் இது வெறும்
எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவ
தற்கான் வாய்ப்பில்லை.அதாவது யாரெல் லாம் நாம் பார்க்கும் இணைய பக்க த்தை
பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி யில்லை.
ஹூ
ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது. பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக
உருவாக் கப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண் டிருக்கும் அதே
இணைய தளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கி ன்றனர் என்பதை காண்பிக் கிறது.
ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ பல விஷயங்கள் இருக்கும் அல்லவா?அதே
போல் ஒரே தளத்தை பார்ப்பாவ்ர்களின் ஆர் வமும் ஒத்து போகலாம். எனவே அந்த
தளத்தில் உள்ள மற்ற இணைய வாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொ ண்டு இணைய
அரட்டை யில் ஈடுபடலாம்.இணையதளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம் .
இணையதளத்தின்
உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர் ந்து கொள்ளலாம்.பார்த்து
கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என் றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு
முன் அபிப்ராயம் கேட்கலாம்.இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடை
க்கலாம்.
பேச்புக்
பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார்
என்றும் தெரிந்து கொண்டு அவர்க ளோடு உரையாடலில் ஈடுபட லாம்.
இணைய
அனுபவத்தை இன் னும் கொஞ்சம் செழுமையான தாக சுவையானதாக ஆக்க இந்த சேவை
உதவும்.இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறை யாக
மாற்றி சக இணையவாசிகளொடு தொடர் பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
ஆனால்
ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணைய வாசிளை மட்டுமே பார்க்க
முடியும்.பயர்பாக்ஸ் ,குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை
செல்லுபடியாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக