திங்கள், 19 மார்ச், 2012

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கீகள்

Posted On March 19,2012,By Muthukumar
நீங்கள் அதிக அளவில் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கோப்புகளைப் பயன் படுத்துபவரா? அப்படி என்றால், உங்கள் இடது மவுஸ் பட்டனைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் ஸ்லைடுகளை முன்னோக்கிச் செலுத்துவீர்கள், இல்லை யா? மவுஸின் வீலைக் கீழாகச் சுழற்றி முன்னோக்கி செல்லவும், மேலாகச் சுழற்றி பின்னோக்கிச் செல்லவும் அறிந்திருப் பீர்கள். ஸ்லைடுகளை முன்னோக்கியும் பின்னோக்கியும் செலுத்த இன்னும் சில கீகளையும், பவர்பாய்ண்ட் ஏற்றுக் கொள்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மை அதுதான். பெரிய பட்டியலே இதற்கு உள்ளது. உங்களுக்கு எது இசைவாக உள்ளதோ, அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பின்பற்றலாம்.
ஸ்லைடுகளை முன்னோக்கிச் செலுத்த, கீழ்க்காணும் கீகளைப் பயன்படுத்தலாம்.
ஸ்பேஸ்பார் (Spacebar)
என் கீ (N)
வலது அம்புக் குறி (Right Arrow key)
கீழ் அம்புக் குறி (Down Arrow)
பேஜ் டவுண் கீ (Page Down key)
என்டர் கீ (Enter Key)
பின்னோக்கிச் செல்ல கீகள் என்ன என்ன என்று பார்ப்போமா!
பேக் ஸ்பேஸ் (Back Space)
இடது அம்புக் குறி (Left Arrow)
மேல் நோக்கிய அம்புக் குறி (Up Arrow)
பேஜ் அப் கீ (Page Up key)
எத்தனை கீ வகைகள் உங்களுக்கு உதவ இருக்கின்றன என்று தெரிந்து கொண்டீர் களா! அடுத்த பிரசன்டேஷனில் ஜமாயுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக