Posted on March 30, 2012 by muthukumar
இணையத்
தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை
அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில
வேகமாக இயங்கும்; பல பிரவுசர் கள்
தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். பாதுகாப்பு தருவதில் சில
பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து
அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப,
உங்களுக்கான பிரவுசரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களு டைய
தேவைகளை முன்னிறுத்தி, அதில் வெற்றி பெற்ற பிரவுசரைத் தேர்ந் தெடுத்துப்
பயன்படுத்துங்கள். இந்த தேர்வின் போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த
பிரவுசரும், அது இயக்கப்படும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பைப்
பொறுத்தே இயங்கும். எனவே, உங்கள் ஹார்ட்வேர் வடிவமைப்புகளையும் கருத்தில்
கொண்டு, பிரவுசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாம் பயன்படுத்திப் பார்க்க எடுத்துக் கொண்டவை அண்மைக் காலத்தில் தரப்பட்ட Chrome 17, Firefox 10, Internet Explorer 9 ஆகிய வையாகும். வேகம், பாதுகாப்பு, கூடுதல் வசதிகள்
மற்றும் ஆட் ஆன் தொகுப்புகள் ஆகியவற்றின் அடிப் படையில் இவற்றைத் தர
வரிசைப் படுத்தி னோம். முதல் இடத்தை, அடுத்து வந்த பிரவுசரை மிகக் குறுகிய
மதிப் பெண் களில் முந்திக் கொண்டு பிடித்தது கூகுளின் குரோம் பிரவுசர்
பதிப்பு 17. இதன் ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கம், இணையப் பக்கம் இறங்குவதில்
வேகம், சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல ஆட் ஆன் புரோகிராம்கள்
இதற்கு முதல் இடத்தை வழங்கியுள் ளன. மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பதிப்பு 10
அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இதன் எச்.டி.எம்.எல்.5 கிராபிக்ஸ் இயக்கம்
மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் கூடுதல் வேகத்தினைத் தருகிறது. இதன்
இன்னொரு தனிச் சிறப்பு, இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஆட்
ஆன் புரோ கிராம்கள். இவற்றின் மூலம் இணையத்தில் உலா வருவது எளிதாகவும்,
வேடிக்கையான ஓர் அனுபவமா கவும் உள்ளது.
மைக்ரோசாப்ட்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, சற்று குறைவான மதிப் பெண் களே
பெற்றது. உங்கள் பிரவுசருக்கான தீம் எதனையும் இது தருவ தில்லை. இந்த
வகையில் வாடிக்கையாளர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தருகி றது. மேலும் விண்டோஸ்
லைவ் மெஷ் பயன்படுத்தாமல், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பேவரிட்
தளங்களின் முகவரிகளை இணைக்க முடியாது. ஆனால், பாதுகாப்பு அம்சங்களைப்
பொறுத்தவரை இது சிறப்பாகவே இயங்கு கிறது. எச்.டி.எம்.எல். 5 குறியீடுகளை
மிக வேகமாக இயக்குகிறது. இந்த இரண்டின் செயல்பாட்டில் இது மற்ற
பிரவுசர்களுக்கு இணையாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இனி ஒவ்வொரு பிரவுசரின் நிறை குறைகளைக் காணலாம்.
1. கூகுள் குரோம் பதிப்பு 17:
மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள பிரவுசர். இணைய தளங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கையில், அவை முடங்கிப் போனால் பிரவுசரின் இயக்கத்திறனை
நிறுத்தாமல், அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை இந்த பிரவுசர் கொண்டுள்ளது.
இதன் பல அடுக்கு பாதுகாப்பு (Sandbox) கெடுதல்
விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. மனதைக் கவராத அம்சங்கள் என்று
எடுத்துக் கொண்டால், ஆர்.எஸ்.எஸ். ரீடர் இணைத்துத் தரப்படாததனைச்
சொல்லலாம்; அடுத்து இதன் டிசைன் மிகவும் அழகாக இல்லாதது இணையப்
பயனாளர்களைக் கவர்வதில்லை.
இதன் மற்ற சிறப்பம்சங்கள்:
பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக் கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட்
ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை. இவை அனைத்தும் தொடக்க
நிலை இணையப் பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால்,
அனைவரின் எதிர்பார்ப்பு களை இது நிறைவேற்றுகிறது. இணை யப் பக்கங்களை,
அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் கள் இருந் தாலும், நான்கு
விநாடிகளில் இறக்கித் தருகிறது. பிப்ரவரியில் வெளி யான இதன் பதிப்பில்,
இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன்
அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.
வேறு
மொழிகளில் உள்ள இணைய தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத்
தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை
என்றாலும், அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.
2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10: பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான பிரவுசர். எச்.டி.
எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோ கிராம் கள் இதன்
சிறப்புக்கு அடிப்படை. ஆனால் தேவையற்ற அல்லது அதிக மான ஆட் ஆன்
தொகுப்புகள், பிரவுசரின் வேகத்தை மட்டுப்படுத்து வது இதன் பலஹீனமே. மார்ச்,
2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர், இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன,
மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக்
காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக
இயக்க லாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற
சிறப்புகள்.
3. இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 9:
பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற பிரவுசர்கள் கொண்டி ருக்கவில்லை.
எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன்
டேப்களைக் கை யாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின்
தங்கி உள்ளது.
ஒவ்வொரு
தனி நபருக்குமாக, குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி
தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்ற வற்றில் இணைப் பதில் இன்டர்நெட்
எக்ஸ்பு ளோரர் எதுவும் செய்ய வில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள்
மற்றும் ஸ்பெல் லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது, பலருக்கு
ஏமாற்றத்தைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக