Posted On March 8,2012,By Muthukumar
புதிதாக ஒரு பிளாக்( Blog) என்று சொல்லக்கூடிய வலைப்பூ உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் பலதரப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வோம் ஆனால் உடனடியாக சில செய்திகளை பதிவிட்டு அதை நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும் அப்படி உடனடியாக பதிவுகளை வெளியீடுவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வலைப்பூ தொடங்கி தான் செய்திகளை வெளியீட வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் உடனடியாக செய்திகளை வெளியீடுவதற்கு Instant Blog என்று ஒரு தளம் உள்ளது இதன் மூலம் நாம் பதிவுகளை சில நிமிடங்களில் பதிவிடலாம் தேவைப்படும் நேரங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.instablogg.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Title என்பதில் நாம் எந்த தலைப்பில் பதிவு இடப்போகிறோமோ அந்த தலைப்பை கொடுக்க வேண்டும் அடுத்து உள்ளே இருக்கும் கட்டத்திற்குள் நாம் செய்திகள் அனைத்தையும் நம் விருப்பபடி தட்டச்சு செய்ய வேண்டியது தான், எந்த இடத்தில் எந்தவிதமான மாற்றம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்த பின் Privacy: என்பதில் இந்தப் பதிவை அனைவரும் பார்க்கலாமா அல்லது குறிப்பிட்ட நபர்கள் தான் படிக்க வேண்டுமா என்தையும் தேர்ந்தெடுத்து பின் Comments Enable அல்லது Disable எது வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கு அடுத்து இருக்கும் வார்த்தையை கட்டத்திற்குள் சரியாக கொடுத்து Save and Continue editing எனபதை சொடுக்கினால் போதும் நம் பதிவு இணையத்தில் பதிவிடப்பட்டு
நமக்கு ஒரு முகவரி கிடைக்கும் இதில் Your post is published in the following address for everyone இந்த முகவரியை காப்பி செய்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ எளிதாக அனுப்பலாம் இதே போல் You can edit your post in the following address என்று கொடுத்திருக்கும் முகவரியை சேமித்து வைத்து இந்தப்பதிவில் ஏதாவது எடிட் செய்ய வேண்டும் என்றால் எடிட் செய்யலாம். கண்டிப்பாக உடனடியாக பிளாக் பதிவிட வேண்டும் என்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக