Posted On March 29,2012,By Muthukumar
உங்கள் குழந்தைகள் இணையத்தில் பயன்பெறுவதற்கு மிகச்சிறந்த வலைத்தளங்கள் சிலவற்றை இங்கு தொடர்ச்சியாக தரவிளைகிறோம்.
கேம் ஷோக்கள், பாடல்கள், வீடியோ, கேள்வி பதில்கள் என அனைத்தும் மிகத்தெளிவாகவும் இலகுவாகவும், குழந்தைகளை கவரும் வகையில் இத்தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை இத்தளங்கள் பற்றி அறிந்திருக்காவிடின் முதலில் நீங்கள் சென்று பாருங்கள், பின்னர் இத்தளங்களில் உள்ள வசதிகளை புரியும் வகையில் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.
1. Yahoo! Kids (kids.yahoo.com)
தினந்தோறும் காலையில் எழுந்ததும், யாஹூ தளத்தில் சென்று எவ்வாறு செய்தி வாசித்தல், மின்னஞ்சல் சரிபார்த்தல் என உங்கள் கடமைகளை செய்கிறீர்களோ, அப்படி உங்கள் குழந்தைகளும் தினந்தோறும் இத்தளத்திற்கு விஜயம் செய்யலாம். எல்லா வகையிலான கேம்ஷோக்கள், இசை, திரைப்படங்கள், நகைச்சுவை, விளையாட்டு, ஆன்மீகம், E-Cards என அனைத்தும் இங்கு உள்ளன. என்சைக்கிளோ பீடியாவின் அகராதி இருப்பதால் Study Zone எனும் பிரிவில் விலங்குகள், பொருட்கள் பற்றிய அடிப்படை விபரங்களையும் கற்றுக்கொள்ளலாம். Parent Section இல் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறார்களுக்கே உரித்தான தேடுதல் பொறி (Search engine) வசதியும் உண்டு. இதில் குழந்தைகள் தேடும் எந்தவொரு விடயமும், அவர்களுக்கு ஏற்றது போன்றே இருக்கும். எல்லை மீறப்படாது என்பதற்கு யாஹூ உத்தரவாதம் அளிக்கிறது.
இணைப்பு : http://kids.yahoo.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக