ஞாயிறு, 1 ஜூலை, 2012

டூ இன் ஒன் தேடியந்திரம்.


Posted On July 01,2012,By Muthukumar
ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை.
21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது.
இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக என்ன செய்வீர்கள் கூகுல் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச்சொல்லை டைப் செய்து தேடுவீர்கள்.அதன் பிறகு எந்த தேடல் முடிவை பார்க்க வேண்டுமே அதில் கிள்க் செய்தால் தனியே இன்னொரு இணையபக்கமோ அல்லது இணைய ஜன்னலோ தோன்றும்.அடுத்த முடிவு தேவை என்றால் மீண்டும் ஒரு கிளிக் மீண்டும் ஒரு விண்டோ.
இப்படி செய்யும் போது நாம் இணையத்தில் உலாவத்துவங்கி விடுகிறோம்.அதாவது பிரவுசிங் செய்கிறோம்.
இப்படி ஒவ்வொரு இணையதளமாக தனியே விஜயம் செய்வத‌ற்கு பதில் எந்த பக்கத்தில் தேடுகிறோமோ அதே பக்கத்திலேயே புதிய இணைய பக்கத்தை பார்த்து விடலாம்.தேடல் முடிவுகளில் எதன் மீது கிளிக் செய்தாலும் அதற்கான இணையதளம் அதே பக்கத்தில் அருகில் தோன்றுகிறது.ஆகவே தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலே தேடல் முடிவுகளை பார்க்கலாம்.
எல்லாம் சரி தான்,இத்தகைய வசதி தான் கூகுல் போன்ற தேடியந்திரங்களில் முடிவுகளை முனோட்டமாக பார்க்கும் வசதி இருக்கிறதே என்று கேட்கலாம்.ஆனால் ஸ்லிக் தான் தருவது முன்னோட்ட வசதி அல்ல,முழு வீச்சிலான பிரவுசிங் என்கிறது.அதாவது முழு இணையதளத்தையும் பார்த்து பயன்படுத்த முடியும்.
அதே போல தேவைப்பட்டல் ஒரே பக்கத்தில் பல வகையான முடிவுகளையும் பார்க்க முடியும்.அதாவது இடது பக்கத்தில் தேடல் முடிவுகள வலது பக்கத்தில் டிவிட்டர் பதிவுகள் என பார்க்கலாம்.மேலும் நாம் திறந்த எல்லா இணையதளங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம்.இணையதள‌ங்களை நன்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.நம‌க்கான இணைப்புகளையும் தனியே உருவாக்கி கொள்ளலாம்.
தேடியந்திரஅ உலகை புரட்டி போட்டு விடக்கூடிய சேவை அல்ல;ஆனால் தேடிய்ந்திர அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு சின்ன புதுமை என்பதில் சந்தேகமில்லை.
தேடிய‌ந்திர முகவரி;http://www.slikk.com/default.aspx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக