புதன், 25 ஜூலை, 2012

இன்டர்நெட்டின் ரகசியங்கள்

Posted On July 25,2012,By Muthukumar
இப்போது இணைய நெறிமுறைத் தொகுப்பை[IP suite] பார்க்கலாம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும், பச்சை விளக்கு எரிந்தாலும் வண்டியில் விரையவேண்டும் என்பது காலங்காலமாய் நாம் பின்பற்றிவரும் நெறிமுறை. அது போல இணையத் தொடர்பிலும் பல்வேறு நெறிமுறைகள் உள்ளது. இவற்றை எழு நிலைகளாக எளிதாகப் பிரித்துக் கொள்ளலாம். பரும நிலை[physical Layer], தரவு நிலை[Data Layer], வலைநிலை[Network Layer], இடமாற்றநிலை[Transport Layer], அமர்வு நிலை[Session Layer], காட்சி நிலை[Presentation Layer], பயன்பாட்டு நிலை[Application Layer]

இங்கு நிலை[layer] என்பது தபால் பரிவர்த்தனை போன்ற பல அடுக்கு செயலபாடுகள் என்றாலும் எழு நிலைகளும் உங்கள் கணினியிலேயே செயல்படும். தொழிற்நுட்ப மேம்பாடுகளுக்காகவும், வணிக நோக்கிற்காகவும், புரிதலுக்காகவும் இப்படி[OSI Model] பிரிக்கப்படுகிறது. நவீன வணிகக் கருவிகளில் இந்நிலைகள் சுருக்கப்பட்டு[TCP/IP Model] நான்கு நிலைகளாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. கணினிகள் ஏழு நிலையிலும், சுவிட்சுகள் இரண்டு நிலைவரையிலும், ரவுட்டர்கள் முன்று நிலைவரையிலும் செயல்படும். அந்த மஞ்சள் நிற CAT வகையறா இணைப்பு வயர்களெல்லாம் ஒரு நிலைவரை மட்டும் செயல்படும்.ஒவ்வொரு நிலையின் வேலையும் நம்மைப் பிரமிக்க வைக்கும்.


பயன்பாட்டு நிலை
இப்பதிவை படித்துக் கொண்டிருக்க உதவுவது பயன்பாட்டு நிலை தான், இப்பதிவு எழுதப்பட்டதும் பயன்பாட்டு நிலைதான். இப்போது வால்பாறைக்குச் செல்வோம், இங்கு 'Hi' என்று நீங்கள் ஒரு அரட்டையோ அல்லது மின்னஞ்சலோ தட்டி விட்டீர்கள் இந்த லேயரில் செயல்படும் ப்ரோடோகால்கள் பல உதாரணம்;- சாட் செய்வது Internet Relay Chat இ-மெயில் செய்வது Simple Mail Transfer Protocol இணையப்பக்கம் காட்டுவது Hypertext Transfer Protocol எனப் பல சமாச்சாரங்கள் உள்ளன. இதன் முக்கியப் பணி என்னவென்றால், நீங்கள் தான் அடித்தீர்களா? உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கா? பாஸ்வேர்ட் எல்லாம் சரியா என எல்லாம் விசாரித்தப்பின், அந்த 'Hi' என்ற ஆங்கிலப் பதத்தை அடுத்த நிலைக்கு மாற்றும். அக்கவுண்டே இல்லாமல் அல்வா சாப்பிட வந்தால் அடித்துவிரட்டிவிடும்.

காட்சி நிலை
இந்த நிலைக்கு வந்தவுடன் அந்த ஆங்கிலச் சொல் கணினி சொல்லாகிவிடும் அதாவது Binary எனப்படும் இரும எண்ணாகிவிடும். நீங்கள் அடித்த தகவல் புகைப்படமா, கண்ணொளியா, வெறும் வார்த்தைகளா என்று வடிவத்தையும் குறித்துக் கொள்ளும், மேலும் வங்கி கணக்குகள் போன்ற பாதுகாப்பான பரிவர்த்தனையில் மேலும் encrypt செய்யும். Hi என்பது 01010101010 இதைப்போல மாறிவிடும். யுனிகோட் என்ற வரப்பிரசாதம் இல்லாவிட்டால் தமிழ் எழுத்துக்கள் இந்த நிலை தாண்டி நகராது. தமிழை, கணினி மொழிக்கு ஏற்ப இந்த நிலைதான் மாற்றுகிறது. "மொக்கை" என்று நீங்கள் நக்கல் அடித்தாலும் இந்த நிலையில் பூசியம் பூசியம் பூசியம் ஒன்று பூசியம் ஒன்று ....என்று மாற்றிக் கொள்ளும்.அதேப்போல வெளியிலிருந்து வரும் இரும எண்களைக் கணினியில் தமிழ்படுத்தும்

அமர்வு நிலை
இங்கு நீங்கள் எந்தப் பயன்பாட்டு பொருளைப் பயன்படுத்தினீர்கள் என்பதைக் குறிக்கும். அதனை port என்பார்கள். நான்கு உலாவிகளில், நான்கு irctc தளத்தைத் திறந்து நான்கு ரயிலில், நான்கு சீட்டு பதிகையில், நாலும் மாறி வெவ்வேறு ரயிலில் பதிவானால் நாக்குத் தள்ளாதா? அதனைத் தவிர்த்து, எந்த உலாவிக்கு எந்த ரயில் என சரியாக கணிப்பது இந்நிலையே. உதாரணம் சாட் பெட்டியின் அடையாள இலக்கமும், சாட் போர்ட் எண்ணும் இணைத்து அடுத்த நிலைக்கு அனுப்பும். நீங்கள் திறந்திருக்கும் நான்கு சாட் பெட்டிக்கும் அடையாள இலக்கம் இல்லாவிட்டால் ஒருவருக்குச் சொன்ன பதில் அடுத்தவருக்குப் போகிவிடும் இதனைத் தடுப்பது இந்த நிலை ப்ரோட்டோகால்களே. ஒளிஉரு கலந்துரையாடல்[Video Conference], ஒளிப்பாய்வுடைய கண்ணொளிகள்[streaming Video] போன்ற இடத்திலும் இதன் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கண்ட நிலைகளில் தகவல்களைப் பெற்று DATA என்ற பெயரில் அடுத்த நிலைக்கு ஒரே தரவாக அனுப்பும். அதேப்போல வெளியிருந்து வந்த தரவைப் படித்து சரியான உலாவியில் பதிலைக் கொடுக்கவும் செய்யும்

இடமாற்றநிலை
இங்குத் தான் உங்கள் கணினி பரிமாற்றம் செய்யவே ஆரம்பிக்கிறது. உங்கள் தரவின் அளவிற்குயேற்ப அதனை உடைத்துக்கொள்ளும். பெரிய தகவலோ அல்லது பெரிய கொள்ளளவு கொண்ட விசயம் எதுவானாலும் அதனை உங்கள் இணைய வேகத்திற்குயேற்ப உடைத்துக் கொள்ளும்.
செக்மென்ட்[segment] எனப்படும் இந்த உடைந்த தரவுகளில் வரிசையாக எண்களிட்டு அடுத்த நிலைக்கு அனுப்பும். எல்லாச் செக்மென்டும் வால் ஸ்றீட்டு சென்று சேர்ந்ததா எனச் சோதித்துக் கொள்ளும் இல்லாவிட்டால் மீண்டும் இந்தச் செக்மெண்டை அடுத்த நிலைக்கு அனுப்பும். அதேப்போல அங்கிருந்து வந்த செக்மெண்டையும் எண்வாரியாக வரிசைப்படுத்திப்பார்த்து விடுபட்டதை எண்ணை அனுப்பிய கணினிக்குச் சொல்லும். ஆக என்னதான் உண்டியலை உடைத்தாலும் சில்லறைகளைச் சரியாக எடுத்துவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக