ஞாயிறு, 22 ஜூலை, 2012

முட்டை வேக வைக்கும் அறிவியல்

Posted On July 22,2012,By Muthukumar
முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது நானும் அதே இணையதளம் பற்றி எழுதுவதற்கு காரணம்,இதே போன்ற நேரம் கணக்கிடும் இணையதளங்கள் பற்றி தொடர்ந்து எழுதலாம் என்ற திட்டம் தான்.(அந்த அளவுக்கு விதவிதமான நேரம் கணக்கிட உதவும் இணையதள‌ங்கள் இருக்கின்றன)
அதோடு எக்வாட்சர்ஸ் இணையதளத்தில பலரும் கவனிக்காத இன்னொரு அழகான விஷயமும் இருக்கிறது.அதனை சுட்டிக்காட்டவும் தான் இந்த பதிவு.
முட்டையின் அளவையும் அது பிரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்டதா போன்ற தகவலை தெரிவித்தால் அந்த முட்டையை வேக வைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என தெரிவிப்பதோடு அதற்கான நேரத்தையும் காட்டுகிறது.நேரம் முடிந்ததும் அதையும் உணர்த்துகிறது.இடைப்பட்ட நேரத்தில் அழகான யூடியூப் வீடியோவும் ஒளிபரப்பாகிற‌து.
முட்டை வேக வைப்பதற்கு எல்லாம் நேரம் கணக்கிட்டு கொண்டிருக்க வேண்டுமா என்று சிலர் கேட்கலாம்.குறிப்பாக சமையல் கலையில் அனுப‌வம் மிக்கவர்கள் அலட்சியமாகவே கேட்கலாம்.
ஆனால் முட்டையை கச்சிதமாக வேக வைக்க தேவைப்படும் நேரத்தை சரியாக கணக்கிட்டு சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.அதிலும் சிலர் முட்டையை வேக வைப்பதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா என்றும் கேட்கக்கூடும்.
உண்மையிலேயே அப்படி ஒருவர் கேட்டிருக்கிறார்.அந்த கேள்விக்கு ஒருவர் மிகவும் விரிவாக பதிலும் அளித்திருக்கிறார்.முட்டை வேக வைக்கும் அறிவியலை விளக்கும் அந்த விரிவான கட்டுரையையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.
முட்டிஅயை வேக வைக்கும் முன் இதனை படியுங்கள் என்னும் சிறிய அறிமுகத்தோடு இந்த கட்டுரைக்கான இணைப்பு முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பை கிளிக் செய்தால் முட்டியை வேக வைப்பதில் உள்ள அறிவியல் செயல்பாடு அழகாக விளக்கப்பட்டுள்ளது.கட்டுரையின் ஆரம்பத்தில் முட்டையை வேக வைப்பதற்கான கணித சூத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக முட்டை வேக வைப்பதை சாதாரணமாக நினைக்க முடியாது தான் இல்லையா?
முட்டையை வேக வைக்க ஏதேனும் கனித சூத்திரம் இருக்கிறதா என கேட்டு நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியான கடிதஅத்திற்கு பதிலாக ஏன் இல்லை என்று கேட்டு டாக்டர் சார்லஸ் வில்லியம் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
இந்த கட்டுரையின் போக்கிலேயே முட்டியை வேக வைக்கும் கலை தொடர்பாக கற்றுத்தரும் லார்ன்2.காம் தளத்திற்கு இணைப்பு தரப்பட்டுள்ளது.அதோடு இந்த‌ கட்டுரையோடே முட்டை வேக வைப்பதற்கான நிபுணர் ஒருவரின் கையேடும் இடம் பெற்றுள்ளது.டெல்டா என்னும் பெண்மணி எழுதியுள்ள அந்த கட்டுரையை படிக்கும் போது முட்டையை வேக வைப்பதில் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றனவா என்ற வியப்பு ஏற்படுகிறது.
இணையதள முகவரி;http://www.eggwatchers.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக