ஞாயிறு, 8 ஜூலை, 2012

இணையத்தில் கோப்புகளை பெற புதிய வழி!


Posted On July 8,2012,By Muthukumar

இணையம் வழியே கோப்புகளை அனுப்பி வைக்க உதவும் தளங்கள் நிறைய இருக்கின்றன. முதலில் அறிமுகமான யூசென்ட் இட் ல் துவங்கி பிரபலமான டிராப் பாக்ஸ்,சர்ச்சையில் சிக்கிய மெகா பலோடு என இந்த தளங்களீன் பட்டியல் கொஞ்சம் நீளமானது.
இமெயிலில் அனுப்ப முடியாத பெரிய கோப்புகளை பரிமாரிக்கொள்ள இந்த இணையதளங்கள் கைகொடுக்கின்றன.
ஆனால் இந்த கோப்பு பரிமாற்ற சேவையில் ஒரு சின்ன டிவிஸ்ட்டோட்டு ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.
சென்ட்பைல்ஸ்2மீ ;இது தான் அந்த தளத்தின் பெயர்.
அதன் பெயரை படித்தவுடனேயே அதன் செயல்பாட்டை புரிந்து கொண்டு விடலாம்.ஆம்,கோப்புகளை பெற இந்த தளம் உதவுகிறது.
மற்ற கோப்பு பரிமாற்ற தளங்கள் கோப்புகளை அனுப்பி வைக்க உதவுகின்றன என்றால் இந்த தளம் பிரதானமாக மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற வழி செய்கிறது.
யாரிடமிருந்தாவது உங்களுக்கு கோப்பு தேவை என்று வைத்து கொள்ளுங்களேன் அப்போது இதில் நுழைந்து கோப்பை பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டு அதற்கான இணைய முகவரியை பெற்று கொள்ள வேண்டும்.அதன் பிறகு அந்த இணைய முகவரியை இமெயில் மூலம் யாரிடம் இருந்து கோப்பு தேவையோ அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அதனை பெறுபவர் அந்த இணைய பக்கத்தில் கோப்பை பதிவேற்றினால் இமெயில் மூலம் தகவலோடு அந்த பக்கம் வந்து சேர்கிறது.
கோப்புகளை பதிவேற்றும் இணையதளங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டசேவை தான்.மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற சிறந்த வழியாகவும் தெரிகிறது.ஆனால் இலவசமானதா என்று தெரியவில்லை.இமெயிலை பதிவு செய்யுங்கள் விரைவில் அது பற்றி தகவல சொல்கிறோம் என்கிறது இந்த தளம்.
இணையதள முகவரி;http://sendfiles2.me/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக