வெள்ளி, 20 ஜூலை, 2012

செல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .

இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.
 
மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர் வீச்சும் அதிகமாக இருக்கும்.
உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தர ப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொ டுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.
போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்க ரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலா ம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர்வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக்கொள் ளலாம்.
போனில் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதி கம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும்போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக அவசியமான நேரங்க ளில் மட்டும் மொபை ல்ஐ பயன்படுத்துங்க ள்.
உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இ ருந்தால், உங்கள் போ ன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப் போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக் கையில் பேசவும்.
சிறுவர்களின் உடல் மற்றும் மூளையே பெரியவர்களைக் காட்டிலு ம் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்கு ள்ளாகும். எனவே சிறுவ ர்களை மொபைல் பயன் படுத்துவதிலிருந்து தடுக் கவும். குழந்தைகளுக்கு அருகில் இருந்து மொ பைலை பயன்படுத்த வே ண்டாம். முக்கியமாக கர்ப்பினிகளுக்கு அருகில் மொபைலில் பேசுவதை தவிர்க் கவும்.
மொபைல் போன் உறைகள் போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவி ற்குத்தடுப்பதால், சிக்னல்களை த் தெளிவாகப்பெற உங்கள் போ ன் அதிக கதிர்வீச்சினை அனுப்பு ம். எனவே றைகள் பயன்படுத் துவதனைத் தடுக்கவும்.
சந்தையில் மலிவாக கிடைக்கு ம் சீன தயாரிப்பு மொபைல்போ ன்கள், ஏனையவற்றை காட்டி லும் அதிக கதிர்வீச்சை கொண் டவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இவைதவிர, போக்குவரத்தில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பாவிப்பது உடனடி மரணத்தை விளைவிக்க கூடியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக